பக்கம்:இலக்கியக் கலை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 இலக்கியக் கலை வழங்கப்படினும் வேறுபாடு சிறிதளவு உள்ள பல சொற்களே யர்கும். செய்யுள் என்பது செய்யப்பட்டது என்ற பொருளை யுடையது. எனவே, செய்யப்பட்டதெல்லாம் கவிதை ஆகாது. இவ் வேற்றுமையை, "உளங்கனிந்த போதெல்லாம் உவந்துவந்து பாடுதுமே” என்ற நாவுக்கரசர் பெருமான் வாக்கால் அறியலாம். கோலரிட்ஜ் என்ற கவிஞர், பாட்லைப் பற்றிக் கூறும் சொற் களாவன: 'சாதாரண அளவுக்கு மேற்பட்ட உணர்ச்சி நிலையும், சாதாரண அளவுக்கு மேற்பட்ட ஒழுங்கும் கலந்து விளைவது கவிதை." - கலைஞன் காட்சி. சிறந்த கவிதை இம்முறையிலேயே தோன்றுகிறது. கவிஞன் மனம் ஏனையோரின் மனத்தைக் காட்டிலும் சிறிது வேறுபட்டது. கவிஞன் ஒரு செயலையோ பொருளையோ காண்பதாக வைத்துக் கொள்வோம். ஏனையோர் அதனைக் காணுகின்றபொழுது, காணுகின்றவன், காணப்படுகிற பொ. ரு ள், கண்டதால் உண்டர்கிற சுவை என மூன்று பொருள்கள் தனித்தனியே இருக்கக்காணலாம். ஆனால் கவிஞன் காணுகையில் இரண்டாவ தாக உள்ளதும், சுவையுந்தான் இருக்குமே தவிரக் காண்கிற அவன் பொருளினுள் அமிழ்ந்துவிடுகிறான். தான் என்ற முனைப்பு காணும் அந்த நேரத்தில் அவனிடம் இருப்பதில்லை. அம்முனைப்பு இருக்கும் வரையில் பொருளோடு ஒன்ற அவனால் முடியாதுNஎனவே, சிறந்த கவிதையும் இயற்ற முடியாது. - கவிஞன் தான் காணுகிற பொருளில் அன்பு செலுத்துகிறான். அது வியப்பாகிறது. பின்னர் அதன்பால் காதல் கொள்கிறான். அந்நிலைக்குப் பிறகு அப்பொருளோடு ஒன்றிவிடுகிறான். காதலின் இறுதிநிலையே ஒன்றல்தானே! இதனையே சிறந்த கவிகளுள் ஒருவராகிய பி.பி. ஷெல்லி, "ப கடலெல்லாம் காதலிலேயே முகிழ்க்கிறது' என்கிறார். ஆனால் காதல் என்ற சொல்லுக்குப் பொருளையும் அவரே விரிக்கிறார்: "காதல் என்பது நம்மிலிருந்து நாம் விடுபட்டு வெளியே சென்று உலகில் காணப்படும் அழகுடைய நினைவு, சொல், செயல் என்ற மூன்றிலும் ஈடுபடுவதாகும்." இங்கனம் வெளிச் செல்கிற நான் என்ற உணர்ச்சி காணப்படுகி ற o பொருள்களின் புற அழகு முதலியவற்றால் மயங்கி நின்றுவிடுவ ఇు ல. ஆனால் உலகின் புறத்தோற்றம் என்னும் திரையைக் கிழித்துக்கொண்டு உட்சென்று இலங்கும் அழகில் ஈடுபடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/171&oldid=750982" இலிருந்து மீள்விக்கப்பட்டது