பக்கம்:இலக்கியக் கலை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைக் கலை 186 அழகில் ஈடுபடுகிறது. ஆகவே, கவிஞன் ஏனையோர் காணுகிற காட்சியையும் வியப்பையும் தான் பெறாமல் தனக்கென ஒரு நிலையுடையான் என்பதை அறிகிறோமல்லவா? இதனாலேயே உலகம் சில சமயங்களில் அவனை வெறுங் கனவு காணுகிறவன் என்றும், உலகியலுக்குப் புறம்பானவன் என்றும் கூறுகிறது. பொருள்களை ஊடுருவி நிற்கும் அழகினைப் பருகவல்லவன் கவிஞன் என்றால், அவன் கவிதையும் அகவழகை (புற அழகை அன்று) விெளிப்படுத்துவதாக இருக்கும். - அகவழகே'என்றுமுள்ள உண்மை என்பதில் ஐயமில்லை, இதனாலேயே மற்றொரு பெருங்கவியாகிய கீட்ஸ் என்பார், கவிஞன் எதனை அழகு என்று பற்றுகிறானோ அது உண்மைப் பொருளாகவே இருக்கும் என்றார். இதனால் "சிறந்த கவிஞன் தீர்க்கதரிசி' என்று சொல்லப்படுவது எவ்வளவு உண்மை என்பதும் விளங்கும். இந்தத் தீர்க்கதரிசிக் கொள்கையை மறுப்பார் பலர் உண்டாயினும் அவர்களும், ஊடுருவி நிற்கும் உண்மைப் பொருளை வெளியிட வல்லது கவிதை' என்பதில் ஜயம் கொள்வதில்லை. காட்சி வெளிப்பாடு மேற்கூறிய வழியாக அகஅழகைக் காணும் கவிஞன் எவ்வாறு கவிதை மூலம் அதனை வெளியிடுகிறான் என்று காண்போம். ஒரு காரணத்தை உன்னிப் பாடப்படும் செய்யுட்களைத் தவிர ஏனைய கவிதைகளெல்லாம் திடீரென எழுபவையேயாகும். அத்தகைய கவிதையின் உட்பொருளை, கவிதையை இயற்று முன்னர் கவிஞன் முழுவதும் அறிவதில்லை. அப்பொருளும் ஒரு புகைப்படலம் போலவே கவிஞன் மனத்தில் கருக்கொள்கிறது. இங்கனம் அதுகருக் கொள்வதற்குக் காரணமாக ஏதாவதொரு சிறுசெயலோ சம்பவமோ நிகழலாம்; அல்லது முன்னர் நிகழ்ந்தும் இருக்கலாம். அது பற்றிய நினைவில் அவன் ஆழ்ந்து விடுகிறான். சம்பவம்' அதனைக் காணுகிற அல்லது கேட்கிற அவன் என்ற வேறுபாடுக ளோடேயே, ஏனையோரைப்போல முதலில் காட்சி ஆரம்பமாகிறது பிறர் அக்காட்சியளவில் நின்று விடுகிறார்கள். ஆனால் கவிஞன் காட்சி அம்மட்டோடு நின்றுவிடுவதில்லை. கொஞ்சம் கொஞ்ச மாக அவன் தன்னை அக்காட்சியில் மறக்கிறான். தான் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/172&oldid=750983" இலிருந்து மீள்விக்கப்பட்டது