பக்கம்:இலக்கியக் கலை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16.6% இலக்கியக் கலை இளமை பாரார் வளம்நசைஇச் சென்றார் இவனும் வாரர்ர் எவணரோ எனப் பெயல்புறங் தந்த பூங்கொடி முல்லை தொகுமுகை இலங்கு எயி றாக நகுமே தோழி நறுந்தண் காரே. (குறுந்தொகை,126;) (நமது இளமைபற்றிக் கவலைப்படாமல் பொருள் தேடச்சென்ற தலைவர் எங்கோ இருக்கிறார் எனக் கொத்தான பூக்களையுடையமுல்லை நம்மைப் பார்த்து நகைக்கிறது.1 - இதிலிருந்து கற்பனை எவ்வாறு நினைவிலிருந்து வேறு படுகிறது என்பது விளங்கும். கற்பனை இல்லாதவர்கட்கு முல்லைப்பூவும் கார்காலமும் எந்த விதமான உணர்ச்சியையும் உண்டாக்குவதில்லை. ஆனால் இதே பொருள்ளைக் கவிஞன், நாம் காண்பதுபோல் காண்பதில்லை: தன் புறக்கண்களால்" முல்லைப்பூவைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவன் தன்னை மறந்துவிடுகிறான். காணப்படுவதாகிய முல்லை, காண்பவனாகிய அவன், காண்பதால் பெறும் இன்பமாகிய உணர்ச்சி என்ற மூன்றும் ஒன்றாகி அவன் வேறு ஒர் உலகுக்குச் சென்றுவிடுகிறான். தனிப்பட்ட ஒரு பூ அவனுடைய மனத்தில் எத்தனைய்ே எண்ணக் கோவைகளை உண்டாக்கிவிடுகிறது. பூவைக் கண்ட பலர் மனத்தில் கனவிலும் தோன்றமுடியாத' எண்ணங்கள் (கற்பனைகள்):கவிஞன் மனத்தில் தோன்றுகின்றன. அந்த எண்ணங்கள் வெறும் நினைவுக்கோவையாகமட்டும். அமைந்துவிடாமல் அவனுடைய மனத்தில் உணர்ச்சியை எழுப்பி விடுகின்றன. ஆழ்ந்த அந்த உணர்ச்சிப் பிடிப்பிலிருந்து மீண்ட பிறகே கவிதை பிறக்கிறது. இந்தக் கற்பனையால் கவிஞன் தான் ஒருவகை உணர்ச்சியை அநுபவித்தான் உன உணருகிறோம்; நம்மையும் அப்பாடலைப் படித்து அதே உணர்ச்சியைப் பெறுமாறு: செய்தான்.என்றும் அறிகிறோம், அவன் அநுபவித்த உணர்ச்சியை நாம் அநுபவிக்குமாறு செய்தது அவனுடைய பாடல். அப்பாடல் எவ்வாறு நம்மை அநுபவிக்கச் செய்தது? அப்பாடலில் உள்ள சொற்கள் புதியன அல்ல. நமக்குத் தெரிந்திருக்கும் இச்சொற்கள் இதுவரை இத்தகைய உணர்ச்சியை நமக்கு ஊட்டியதுண்டா? இல்லையே! அங்ங்னம் இருக்க், இப்பொழுது மட்டும் அவை அத்தொழிலைச் செய்யக் காரணம் யாது? , . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/177&oldid=750988" இலிருந்து மீள்விக்கப்பட்டது