பக்கம்:இலக்கியக் கலை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 164 இலக்கியக் கலை விஞ்ஞான வழியில் தோன்றும் சில முடிபுகளும் இதே தன்மையில் வெளிப்படுபவையே. ஆ ப் பி ள் பழம் மரத்திலிருந்து கீழே விழுந்ததாகிய ஒரு செயல்ே நியூட்டனின் கற்பனையைத் தூண்டிற்று. அதன் பயனாகப் பொருள்களுக்குள் இயற்கையாய் இருக்கும் ஆகர்ஷண சக்திச் சட்டங்கள் தோன்ற லாயின. இந் நுட்பம் நியூட்டனின் மனத்தில் பளிர் என்று தோன்றியதேயாம். நியூட்டனின் இந்தக் கற்பனை விஞ்ஞானக் கற்பனை என்றும் கவிஞனுடையது 'கலைக் கற்பனை என்றும் கூறப்பெறுமானாலும் ஏறத்தாழ இவை இரண்டும் ஒன்றுதான். இவற்றால் இவ்விருவரும் பெறும் முடியும் ஒன்றுதான். ஆனாலும் அம்முடிபை வெளியிடும்பொழுது இருவரும் இரண்டு வேறுபட்ட வழிகளைக் கையாண்டு இரண்டு எல்லைக்குச் சென்று விடுகின்றனர். விஞ்ஞானி தான் கண்ட பொதுத்தன்மையை நிலைநாட்ட இதுவரையில் கண்ட மெய்ம்மைகளை எல்லாம் வரிசைப்படுத்தி அவற்றின் இடையே காணக்கிடக்கும் பொதுத் தன்மை, தொடர்பு என்பவற்றை விளக்குகிறான். அவற்றை எல்லாரும் காணலாம். அவன் கடைப்பிடித்த வழியே சென்றால் நாமும் அவனுடைய முடிபை அடையலாம். அம் மெய்ம்மைகளே தவறானவை என்று நிரூபிக்கப்படுகிறவரையில் அவனது முடியும் நிலைநிற்கும். அம் மெய்ம்மைகளுக்குத் தீங்கு நேருகையில் முடியும் அழியும். கதை கூறுமுறை இனிக் கலைஞனும் விஞ்ஞானியும் மாறுபடுவதைக் காண் போம். தான் கூறப்போகும் பொதுத் தன்மையை நிலை நாட்டக் கலைஞன் சாட்சியங்கள் தேடுவதில்லை. தருக்க முறையில் நிலை நாட்டவும் முற்படுவதில்லை. அங்ங்ணம் முற்படின் அவன் கலைஞ லும் அல்லன்; அவனது முடிபு கலையும் அன்று. கவிஞனுடைய முடிபுகள் பொறி புலன்கள் மூலம் அநுபவித்தற்குரியனவேயன்றி, ஆராய்ச்சி அறிவு என்று சொல்லப்படும் சோதனைச்சாலையில் சோதனைக் குழாய்களில் போட்டு அலசிப் பார்ப்பதற்காக ஏற்பட்டவை அல்ல. அதனுடைய வேலை இதுவே உண்மை’ என்று தருக்க மூலம் நிரூபிப்பதன்று. ஆனால் தான் அநுபவித்த பொருளை நாமும் கண்டோ கேட்டோ அநுபவிக்குமாறு செய்தலே யாம். தொடர்பில்லாதவைபோல் நமக்குப் படும். இவ்வுலகப் பொருள்களையே கலைஞனும் காணுகிறான். அவற்றின் உள்ளே ஊடுருவி நிற்கும் தொடர்பு அவனுக்கு விளங்குகிறது. அந்தத் தொடர்பை விளக்கச் சில இன்றியமையாத சாதனங்களையும் பொருள்களையும் எடுத்து வேறு முறையில் அவன் கோக்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/181&oldid=750993" இலிருந்து மீள்விக்கப்பட்டது