பக்கம்:இலக்கியக் கலை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் கற்பனையும் 165 கோத்த பொருள்கள் புதியதொரு காட்சியை நல்குகின்றன. உலகின் புற அகக் காட்சிகளைப் படங்கள்போல அவன் கண்டு நம்மையும் படங்களாகவே அவற்றைப் பார்க்குமாறு செய்கிறான். ஒவியத்தைக் காணும் இருவரில் ஒருவன், அறிவற்ற ஒருவன். வேலையற்றுப்போய் வர்ணங்கள் ஒன்று கலந்ததன் விளைவு என்று கூறலாம். மற்றொருவன் அப்படத்தின் தன்மை அறிந்து தனது மனத்தை அதன்பாற் செலுத்தித் தன்னை மறந்தும் இருக்கலாம். கவிஞனது கவிதையை நோக்குவோரும் இவ்விரு வகையைச் சேர்ந்தோரே. கவிதையைப் படித்தவுடன், தமது அநுபவமாகிய குப்பியில் கவிதையை அளந்து கவியும் வாழ்க்கையும் மாறுபடுகின்றன என்று கூறுகிறவர்களும் உண்டு. இத்தகை யோருக்காகக் கவிதை தோன்றவில்லை என்பதை மனத்தில் நன்கு பதித்துக் கொள்ளல் வேண்டும். கலையும் ஆக்கமும் மற்றொரு வழியாக நோக்குமிடத்தும் கலைஞனது கலை' ஆக்கத் தன்மையுடையதென்பது விளங்கும். கலையின் முற்றி விளைந்த பயன் கலைஞன் மனத்தில் முகிழ்த்த நிலையிலும் சரி, அதனை அநுபவிக்கிறவன் மனத்தில் படும் நிலையிலும் ச்ரி, அது உயிருள்ள பொருளாகவே இலங்கக் காண்கிறோம். சிற்பம் ஒர் உயர்ந்த கலையாகும். தமிழர்கள் கண்ட சிற்பக் கலைகளுள் தலையாய சிறப்புடையது நடராச வடிவம். முதன் முதல் எந்தக் கலைஞன் மனத்தில் இவ்வடிவம் முகிழ்த்ததோ நாம் அறியோம். என்றாலும் 'ஒரு நாமம் ஒர் உருவம் ஒன்றுமில்லாத அப்பரம் பொருளுக்குக் கற்பனை ஒன்றைமட்டிலுமே துணையாகக்கொண்டு இங்ங்னம் ஒரு வடிவைக் கலைஞன் தந்தபொழுதும் அதனை உயிருள்ள பொருளாகவே நினைந்தான். இவ்வடிவைக் கண்டு களிக்கும் கலைஞர்கள் அனைவரும் உயிருள்ள ஒன்றாகவே இதனைக் கண்டனர். சிதம்பரத்தில் ஆனந்தத் தாண்டவஞ் செய்யும் பெருமானை கோடிக்கணக்கான மக்கள் கண்டதுண்டு. எனினும் திருநாவுக்கரசர் என்ற ஒரு கலைஞர் மட்டும்தான் அக்கலையின் உயிர்ப்புத் தன்மையை உணருகிறார். 'தில்லையுட் சிற்றம்பலத்து நட்டம் என்று வந்தாய் என்னும் எம்பெருமான்றன் திருக்குறிப்பே என்று அவர் பாடும்பொழுது பெருமானின் எடுத்த திருக்கை அவருடன் பேசியதை அறிய முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/182&oldid=750994" இலிருந்து மீள்விக்கப்பட்டது