பக்கம்:இலக்கியக் கலை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 இலக்கியக் கலை பாடல் இயற்றுகிறார். கனவிலும் கருத இ ய ல த சமதர்மக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, "இரப்பாரு மில்லை, ஈவாருமுல்லை மாதோ' என்கிறான், கோசலம் என்ற கனவு நாட்டைக் கூறிய கம்பநாடன். இவ்விருவருக்கும் தாங்கள் வேண்டிய அளவு பேச உரிமை உண்டு. எனவே கம்பன் கண்ட கனவு அநுபவத்திற்குப் பொருத்தம் இல்லை என்றோ, நாடும் ஏடும் மாறுபடுகின்றன என்றோ கூறுவது கவிதைத் தன்மையை நாம் உணரவில்லை என்பதையே காட்டும். நினைவுக் கற்பனை இனிப் பாடலைப் பொறுத்தவரையில் கற்பனை மற்றொரு வகையில் வேலை செய்கிறது. இங்கு ஆக்க வேலை ஒன்றுமில்லை. அதற்கு மறுதலையாக நமது நினைவைத் தட்டி எழுப்புகிறது. நாம் என்றும் காணுகிற பொருள்களையே கூறுகிறது. ஆனால்பாடலைப் படித்தவுடன் அப்பொருள்களின் நினைவு இதுவரை நாம் அநுபவி யாத ஒரு புதிய ஆற்றலோடு மனத்தில் தோன்றுகிறது. அத்தகைய உயர்ந்த நினைவுக் கற்பனையுடைய பாடல்களில் நாம் நம்மையே மறந்துவிடுகிறோம். கீழ்க்கண்ட பாடல்களை நோக்குக. இரவு நேரத்தில் தலைவியின் வீட்டைத் தேடி வந்த தலைவனைத் தோழி கண்டு கூறுகிறாள் : . . . . . . பெயல்கண் மறைத்தலின் விசும்புகாணலையே. நீர்பரந் தொழுகலின் கிலங்கா ணலையே எல்லைசேறலின் இருள்பெரிது பட்டன்று. (குறுந்தொகை : 355) (அடைப்ழ்ை மேகத்தால் ஆகர்யமும் தெரிய வில்லை. மழை வெள்ளத்தால் பூமியும் தெரியவில்லை. சூரியன் மறைந்துவிட்டமையின் இருளும் சூழ்ந்து விட்டது. வழியினது தடந்ததற்கரிய தன்மை இதில் கூறப்படுகிறது. மற்றிெடுதல்லவி தீேர்தியிடத்து இதே கருத்தைக் கூறுகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/185&oldid=750997" இலிருந்து மீள்விக்கப்பட்டது