பக்கம்:இலக்கியக் கலை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம்: அறிமுகம் 3 முதன்முதலாக இலக்கியம்' எனும் வடிவத்தில், தோலா மொழித் தேவர் (கி.பி. 9 நூ. ஆ இறுதி), இச் சொல்லைப் பயன் படுத்தியுள்ளதைக் காணுகின்றோம். "காம நூலினுக்கு இலக்கியம் காட்டிய வளத்தால்' (சூளாமணி 459) எனும் அடியிலும், எடுத்துக்காட்டு உதாரணம்’ எனும் பொருளிலேயே இச்சொல் வழங்கப்பட்டுள்ளது. அகத்தியர் பெயரால் வழங்கப்பட்டு வரும் ஒரு பழம் பாடல், யாப்பருங்கல விருத்தியாசிரியரால் மேற்கோளாக எடுத்தாளப் பட்டுள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்கது. "இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே எள் இன்று ஆகில் எண்ணெயும் இன்றே எள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல் இலக்கியத்தினின்று எடுபடும் இலக்கணம்" ( பேரகத்தியத்திரட்டு, மேற்.1) என்பது அகத்தியர் பெயரால் வழங்கப்பட்டுவரும் பழம் பாடலாகும். இந்தப் பழம்பாடலின் காலத்தைக் கண்டறிய இயலவில்லை. எனினும் யாப்பருங்கலத்தின் விருத்தியுரையாசிரியரின் காலத் திற்கு முன்பே, இத்தகைய எண்ணப் போக்கு தமிழகத்தில் நிலவியமை புலனாகின்றது. இந்தப் பழம்பாடலில்தான், முதன்முதலாகக் கற்பனை வளமும், கலையழகும் வாய்ந்ததொரு படைப்பு இலக்கியம்’ எனும் பெயரால் சுட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆயினும் பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான், மேற்கு நாட்டுக் கல்வியைப் பயின்று சிறந்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களும், பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை, அவர் களும் ஆங்கிலத்தில் வழங்கி வரும் லிட்டிரேச்சர் (Literature) என்னும் சொல்லிற்குப் பொருத்தமான தமிழ்ச்சொல்லாக இதனை வழக்கிற்குக் கொண்டுவந்துள்ளனர்." இனி, இச்சொல்லிற்குரிய பொருளைப் பார்ப்போம். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த சேஷகிரி சாஸ்திரியார் எனும் மும்மொழிப் புலவர் (மாநிலக் கல்லூரியின் சமஸ்கிருதப் பேராசிரியர்) 'லக்ஷணா (இலட்சணம் எனும் வடசொல்லில் இருந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/19&oldid=751002" இலிருந்து மீள்விக்கப்பட்டது