பக்கம்:இலக்கியக் கலை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் சொல்லும் 177 என முன்னர்க் கண்டோம். உணர்ச்சியை எவ்வாறு பெறுகிறோம்? பொறிபுலன்கள், ஒன்றைக் கண்டோ கேட்டோ நமக்கு உணர்ச்சியை அல்லது அனுபவத்தை உண்டாக்குகின்றன. ஆகவே காண்பதற்கும் கேட்பதற்கும் அடிப்படையாக உள்ளவை பொருள் கள் என அறிகிறோம். பொருள்கள் எவ்வாறு குறிக்கப்படுகின்றன. சொற்களால் அன்றோ? ஆதலால் சொற்களைக் கேட்கும் பொழுது அச்சொல் செவி என்னும் பொறிவழிச் சென்று பொருள்ை உணர்த்தி அப்பொருளுடன் தொடர்புடைய உணர்ச்சியையும் நமக்கு ஊட்டுகிறது. சுருங்கக் கூறுமிடத்து உணர்ச்சியை ஊட்டக் கூடியவை புலனறிவாகவும், புலனறிவின் அடிப்படை, பொருள் களாகவும்,பொருள்களைக் குறிப்பன சொற்களாகவும் இருப்பதால், முறைப்படி சொற்கள் புலனறிவைத் தருதல் கூடும். அதிலிருந்து கற்பன்ை தோன்றுகிறது. சொற்கள் ஒரு சம்பவத்தை நினைவுக்குக் கொணர்ந்து, அந்தச் சம்பவத்தைச் சுற்றிக் கற்பனையைப் பின்னி, அப்பின்னலின் மூலம் உணர்ச்சியை உண்டாக்குகின்றன. இவ்வள விற்கும்.காரணமான அச்சொற்கள், உணர்வுச் சொற்கள் என்ற வகையைச் சேர்ந்தவை. இவற்றின் மாறானவை அறிவுச் சொற்கள் எனப்படும். உதாரணமாகக் கடல்' என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இச்சொல்லைக் கேட்கிற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகைக் கற்பனையை இது உண்டாக்குகிறது. ஆனால் கோபம், சாந்தம் முதலிய சொற்கள் ஏறத்தாழ ஒரே பொருளை யாவர்க்கும் வழங்குவது அநுபவம். கடல் என்ற சொல்லைக் கேட்டவுடன் ஒவ்வொருவரும் அவரவர் கடலைக் கண்ட இடத்தை யும், அங்கு நிகழ்ந்தவற்றையும் தமது கற்பனையில் கொண்டு வருகின்றனர். அச்சொல்லைக் கேட்கிற இருவருக்கு ஒரேமாதிரி முன்நிலை உண்டாவதில்லை. அவ்விருவரும் ஒரே இடத்தில், ஒரே சூழ்நில்ையில், ஒரே கடலைக் கண்டிருப்பினும், பின்ன்ர். அச் சொல்லைக் கேட்கும் காலத்தில், ஒரேவக்ை நினைவையும் கற்பனை யையும் மேற்கொள்வர் என்று கூற இயலாது. கி.ஆ.. கவிதையும் இத்தகையதே. கவிஞன் கற்பனை ஒன்றாக இருப்பினும் அப்பாடலைப் படிப்போரது மனநிலைக்கு ஏற்ற முறையில் உணர்வைத் தூண்டுகிறது கவிதை. ஒசைப் பொருள் இங்கே ஒரு சொல்லானது கற்பனையைத் தூண்டும் சக்தியோடு காணப்படுகிறதோ, எங்கே ஒரு சொல் ஒரு இ.-12 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/194&oldid=751007" இலிருந்து மீள்விக்கப்பட்டது