பக்கம்:இலக்கியக் கலை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175. இலக்கியக் கன்ல் சம்பவத்தை அல்லது படத்தை அப்படி நினைவிற்குக் கொண்டு. வருகிறதோ, எங்கே ஒரு சொல் கற்பனைச் சக்திக்கு விருந்தளிக் கிறதோ, அங்கே, அந்தச் சொல் தோன்றும் இடத்திலே, நாம் கவிதையைக் காண்கிறோம்.) இத்தகைய செயலைச் சொல் எவ்வாறு செய்கிறது? தன்னிடத்துள்ள இரண்டு தன்மைகளால் செய்கிறது. ஒன்று அதன் ஒசை என்றும், ஏனையது அதன் பொருள் விரிக்கும் தன்மை என்றும் கூறப்படும். சொல்லுக்குள்ள இவ் விரண்டு தன்மைகளும் நன்கு விளங்குமிடம் கவிதையே ஒசை நயத்தோடு கவிதையில் தோன்றும் சொல், மனத்தின் பல்வேறு மூலைமுடுக்குகளிலும் சென்று, அங்கே பதுங்கி இருக்கும் பழைய நினைவுகளை இழுத்து வருகிறது. இங்கனம் கொண்ரும் அதன் சக்தியை மொழிநூலார் பொருள் சக்தி என்றும், ஒசையளவில் அது செய்யும் தொழிலை 'ஒசைச் சக்தி என்றும் கூறுவர். . . ஒசையளவிலும் சொல் ஒரு பெரிய தொழிலைச் செய்கிறது கவிதை எந்த உணர்ச்சியைப் பெரியதாகக் கொண்டு தோன்றியிருக் கிறதோ, அவ்வுணர்ச்சிக்கு ஏற்ற ஒசையிலேயே அது அமைந் திருக்கும். கவிதையும் அதன் பொருளும் விளங்காவிடினும் நல்ல ஒசையுடன் படிக்கப்பட்டால், இன்ன உணர்ச்சியை அடிப்படை யாகக் கொண்டெழுந்தது இக்கவிதை என்று கூறிவிட முடியும் இவ்வுண்மையைப் பழந்தமிழர் நன்றாக அறிந்திருந்தனர். பா: என்ற சொல்லுக்குப் பொருள் கூறவந்த பேராசிரியர் கீழ்வரும்ாறு எழுதிப் போந்தார்; 'சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்தும் சொல்லும் தெரியாமற் பாடம் ஒதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற்கேதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை' எனவே சொல்லின் ஒசை மிக்க வன்மைவாய்ந்ததென்ற உண்மை இதனால் அறியப்படும். -- = சொல்வோன் குறிப்பு சொற்கள் பொருளை எவ்வளவு தெரிவித்தபோதிலும் மனத்திலுள்ள கருத்துக்கள் யாவும் சொற்களில் அடங்கா. ஆனால் கவிதையில் பயின்றுவரும் சொற்கள், உரைந்டையில் வருவன வண்றைக் காட்டிலும் அதிகப் பொருட்செறிவு உடையவை. மேலும் டயில் பயிலும் சொற்கள் புலராலும் கையாளப்படுவதால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/195&oldid=751008" இலிருந்து மீள்விக்கப்பட்டது