பக்கம்:இலக்கியக் கலை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் சொல்லும் 179 கற்பனை உணர்ச்சியைத் தூண்டும் இயல்பைப் பெறாதவை. கவிதையிற் பயிலும் சொற்கள் இவ்வாறு சாதாரண மக்களால் மிகுதியும் கையாளப் பெறாதவையாய் இருப்பது நன்று' என அரிஸ்டாடில் கூறினார். இவ்வாறு அவர் கூற இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது அவை பொதுமக்களால் பேசப்படுதலின் அவர்களுடைய சாதாரண உணர்ச்சியின் தொடர்புடையனவாய் உள்ளன. கவிதைக்குரிய சொற்கள் இத்தகைய இழிநிலையில் போகாதது மட்டுமன்று; அவை ஏற்கனவே பல கவிதைகளிற் பயன்படுத்தப்பட்டுள்ளமையின் மிகுதியும் கற்பனைச் செறிவும் பொருள் வளமும் உடையனவாய் உள்ளன. இக்காரணத்தால் தான். பழைமையான சொற்கள் கவிதைக்கு ஏற்றவையாய் உள்ளன. ஆசிரியர் தொல்காப்பியனார் இழும் என்மொழியால் விழுமியது நுவலல் என இக்கருத்தைக் கூறியுள்ளமை அறிதற்பாலது. சொற்கள் பொருளை நேரடியாகவும் மறை முகமாகவும் தெரிவிக்கின்றன. கூடுமானவரையில் பழக்கத்திலுள்ள ஒவ்வொரு சொல்லும், எவ்வளவு பொருளை மறைமுகமாகத் தெரிவிக்கிறதென அறுதியிட்டுக் கூறிவிடலாம். நாள்தோறும் நாம் வழங்கிவரும் சொற்கள் கூட இந்தச் சக்தி வாய்ந்தவை. இலக்கண முறைப்படி செம்மையாக, அ ைம ந் து ள் ள் எத்தனையோ சொற்களும், வாக்கியங்களும், பிறருக்கு மன வருத்தத்தை உண்டாக்கக் கூடியவை என்பது அநுபவம். உதாரணமாக "தேவரனையர் கயவர் அவருந்தான், மேவன செய்தொழுகலான்." என்ற குறளை எடுத்துக்கொள்வோம். கயவர்களைத் தேவரோடுதான் ஒப்பிட்டிருக்கிறது. ஒரு து நாகரிகமற்றதென்று கூறமுடியாது. என்றாலும் என்ன? இக்குறள் தமக்குப் பொருத்தமானது என்று சொல்லிக்கொள்ள எவரும் முன்வரார். இதன் காரணம் என்ன்?, மொழிகள் எண்ணத்தை வெளியிடும் கருவிகள் என்று கூறினோம். கவிதையில், எண்ணங்கள் என்று சொல்லப்படுபவை, உணர்ச்சிக்கு அடிப்படையான அநுபவங் களேயாம். இங்ங்ணம் மொழிவடிவாக நம்முள் நுழைகின்ற எண்ணங்கள், அங்கு மீண்டும் அநுபவத்தைத் தூண்டுகின்றன. எவ்வளவு தூரம்; சொல் அநுபவத்தைத் தூண்டக்கூடும் என்பது அது தோன்றும் சூழ்நிலையைப் பொறுத்ததேயாகும். இங்கே o: சூழ்நி லை என்பது, - பாடினவன் மனக்குறிப்பும், கவிதை அறிவுறுத்த வந்த கருத்தும் ஆகும். மேலே கூறப்பட்ட குறள், ச்ொல்லளவில் கய்வரைத் தேவரோடு ஒப்பிடினும், அவர்களை இழித்துப் பேசும் கருத்துடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/196&oldid=751009" இலிருந்து மீள்விக்கப்பட்டது