பக்கம்:இலக்கியக் கலை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 இலக்கியக் கலை தோன்றியதே; புகழ்வதுபோலப் பழிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் இப்பாடல் தோன்றியிருப்பதனால்தான், தேவரோடு ஒப்பிடப்பட்டிருப்பினும், தமக்கு ஏற்றதெனச் சொல்லிக்கொள்ள் யாரும் முன் வருவதில்லை. to - - மதிப்புடைய சொற்கள் ஆகவே கவிதையில் பயிலும் சொல் என்ன பொருளைத் தருகிறதென்பது ஆராயப்பட வேண்டுமேயானால் அச்சொல்ல்ைத் தனியே எடுத்துப் பார்த்தல் ஆகாது. அச்சொல் தனிப்ப்ட்ட் முன்றயில் காதில் விழும்போது ஒரு நினைவை உண்டாக்குவது உண்ண்ம்யே. ஆனால் ஏனைய சொற்களோடு கலந்து முழுவதும் மனத்தில் படும்பொழுது, தனது ஒசை வன்மையாலும், பொருள் தன்மையாலும் புதியதொரு - கருத்தை உண்டாக்குகிறது. அம்முழுக் கருத்தையும் வாங்கிக்கொள்ளாம்ல் சொற் ப்ெர்ருளை மட்டும் ஆராய்தல் பெரும் தவ்றாகும். அப்படியானால் கவிதையில் பயன்படும் சொல்லுக்கென்று தனியான் ஒசையும் பெர்ருளும் உண்டாவென்று கேட்கலாம். அவ்வாறு 'ஒன்றும் இல்லை. சொல்லுக்கு என்றும் உள்ள பொருளே உளது. ஆனால் பல சொற்களை ஒன்று சேர்ப்பதன்மூலம், தன்ப்பட்ட் முறையில் அவைகளுக்கு இல்லாத ஒரு பொருட்சிறப்பு ஏற்பட்டு விடுகிறது. தங்களின் வேறு பட்ட அப்பொருளைத் தாங்கி நிற்கும் அச்சொற்கள் நாளடைவில் அப்பொருளுக்கும் தமக்கும் வேறு பாடில்லாத முறையில் கலந்துவிடுகின்றன. உதாரணமாக, ஊர், கேளிர் யாதும் என்ற சொற்கள் நாமறிந்தவையே. அகராதியைப் பார்ப்போமர்னால் ஊர் என்ற சொல்லுக்குப் புல்ர் சேர்ந்து நிலையாக வாழுமிடம் என்றும், கேளிர் ஒன்று சொல்லுக்குத் சுற்றத்தார் என்றும் பொருள் காணப்படும். ஆனால் ஒரு கல்ைஞன், "யாதும் ஊரே யாவருங் கேளிர்" என்று பர்டியபின்ன்ர் அச்சொற்றொடரின் பொருள்ே மாறிவிடுகிறது. இன்று கேட்போரது மனத்தில், அத்தொடர் தமது நாடு தேசம் மக்கள் என்ற குறுகிய மனப்பான்மையைத் ஆடந்து ஆகும் முழுவதும் ஒன்றாக வாழ்ந்தால் வாழலாம், @rGಲ್ಲಿ யாவர்க்கும் வீழ்ச்சியே என்று நின்ைக்கும் உலக சகிேரீதரத் த்ன்ன்மன்யி தில்லவா நினைவுக்குக் கொண்டுவருகிறது! இன்றும் பலர் வாங்விட்டு வெளியே சொல்வதற்கு அஞ்சுகிற.இப்பொருள் இச்சொற்களில் மறைமுகமாக உள்ள பொருளேயன்றி, நீேரடியர்னதன்று அதாவது தாதாரணுச் சொற்கள்கூடக் கவிதையில் பயன்படும்பொழுது ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/198&oldid=751011" இலிருந்து மீள்விக்கப்பட்டது