பக்கம்:இலக்கியக் கலை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்வின்தயும் சொல்லும் - 181 தனிப்பட்ட மதிப்பைப் பெற்றுவிடுகின்றன. இதனைக் கவிதை மதிப்பு என்று திறனாய்வாளர் கூறுவர். இதிலிருந்து ஒரு கருத்தை நாம் அறிந்துகொள்ளலாம். இம்மதிப்புடைய சொற்கள் உள்ளன வற்ற்ைக் கவிதை என்றும், இல்லாதவற்றைச் செய்யுள் என்றும் கூறுகிறோம். - - பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் . . . பற்றுக பற்று விடற்கு. (குறள் : 349 (எல்லாப் பற்றுகளிலிருந்தும் இயல்பாகவே நீங்கிய இறைவனை, நம்மிடம் இயற்கையாக அமைந்த பற்று விடவேண்டுமானால், பற்றிக்கோள்க. இக்குறளில் க்ாணப்படும் பற்றுக’ என்னும் சொற்கள் இரண்டில் பின்னையதை நேர்க்குவோம் அதன்கண் உள்ள ஆழ்மும், திண்மையும், மதிப்பும் முதலாவதாக உள்ள பற்றுக என்ற சொல்லில் இல்லை. ஒசைநயம் முதலியனவும் இச்சிறப்பைத் தருத்ற்குக் காரணமாக உளவேனும், அச்சொல் அவ்விடத்தில் தரும் பொருள் நய்ம் தனிப்பட்டதாகும். "வேறு வழியே இல்லையாகலின், அத்திருவடியைப் பற்றாது விட்டுவிடின், துன்பம் எல்லையற்றதாய் முடியும். ஆகவே எப்பாடுபட்டாயினும், அதனை விடாது. இறுகப் பிணித்துக்கொள்க' என்ற பொருள்நயம் இவ்விரண்டாவது சொல்லுக்கு இருத்தல் ஆப்பவர்க்கு விளங்காமற் பேர்கள்து. கவிதையில் பயன்படும் சொற்களின் பொருளை ஆராயும் பொழுது மிகவும் கவனமாகப் பார்க்க வேண்டிய தொன்றுண்டு. அதாவது ஒவ்வொரு சொல்லும் தன்னால் இயன்ற அளவு பொருள் விளக்கம் செய்வதோடு, உடனிருக்கும் சொற்களாலும் பொருள் விளக்கம் பெறுகிறது. மிகுதியும் இந்த இயல்பை நம்பியே கவிதை ஆக்கப்படுதலின் கவிதையைப் படிப்போர் கூர்ந்து கவனித்து இப்பொருளையும் மன்த்தில் வாங்கிக் கொள்ள வேண்டும். இவ்விளக்கம் அகராதியில் தேடிப்பார்த்துக் காண்பதும் அன்று. இப்பொருள் . இச்சொல்லுக்கு எல்லா இடத்திலும் பொருந்துவதுமன்று. ஏன்? இக்குறளிலேயே முதலில் வரும் பற்றுக’ என்னும் சொல்லுக்கு இவ்வளவு பொருள் இல்லை இத்தகைய மதிப்பு. கவிதையில் அச்சொல் தோன்றும் இடத்திற்கு ஏற்ப் உண்டாவதேயாம். - ' '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/199&oldid=751012" இலிருந்து மீள்விக்கப்பட்டது