பக்கம்:இலக்கியக் கலை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 இலக்கியக் கலை இலக்கணம்' எனும் தமிழ்ச்சொல் தோன்றியதாகவும், இதைப் போன்றே, லக்ஷயா (இலட்சியம்) எனும் சமஸ்கிருதச் சொல்லில் இருந்து இலக்கியம்’ எனும் தமிழ்ச்சொல் படைத்துக் கொள்ளப் பட்டதாகவும் தெரிவித்துள்ளார்." - இவ்வறிஞரைத் தொடர்ந்து, அறிஞர் சிலர் சமஸ்கிருதச் சொல்லின் திரிபே இலக்கியம் எனும் தமிழ்ச் சொல் என்று கூறலாயினர். - - . தொல்காப்பியத்தில் இலக்கணம்' எனும் சொல், நான்கு இடங்களில் வழங்கப்பெற்றுள்ளமை இங்கு நினைவு கூரத்தக்கது. "வழக்கி னாகிய உயர்சொற் கிளவி இலக்கண மருங்கின் சொல்லா றல்ல." (தொல். சொல். 27) எனும் நூற்பர், போதிய சான்றாகும். இதிலிருந்து, இலக்கணம்' எனும் சொல் பன்னெடுங்காலமாகப் பல்வேறு ஆசிரியர்களால் தமிழில் பயன்படுத்தப்பட்டுள்ளமை இங்குக் கருதத் தக்கதாகும். இந்த வரலாற்றுப் பின்னணியைக் கருத்தில் கொண்டு பேராசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள், ஐம்பது ஆண்டு களுக்கு முன்பே. "இலக்கியம் என்பது மக்களுடைய விழுமிய கருத்துக்களைச் செவ்விய சொற்களால் விளக்கும் கருவியர்ம். இவங்கு, இயம், என அச்சொற்றொடரைப் பிரித்துச் சொல்லாலும் பொருளாலும் செம்மை பெற்றொளிரும் நூலெனப் பொருள் கொள்ளின் மேற்செப்பிய கருத்து வலியுறுதல் காண்க: என்று தெளிவுறுத்தியுள்ளார். - - -- வேறொரு கண்ணோட்டத்தில் இலக்கியம் எனும் சொல் லையும் அச்சொல் உணர்த்தும் பொருளையும் அறிஞர்கள் ஆராய்ந்து, உண்மை காண முயன்றுள்ளனர். இலக்கியம் என்பது, லக்தியம், என்ற வடசொல்லின் திரிபு என்பர். ஆங்கிலத்தில் 'முருங்கை மரம் என்ற சொல் வழங்குவதுபோலவும் தமிழில் கங்காரு (காங்கரு) என்ற சொல் வழங்குவது போலவும் இலக்கியம் என்ற சொல் இரவல் கொண்டது என்பர். லகரியம் எனும் ச்ொல்லிற்கு இரண்டு மொழியிலும் கொள்ளும் பெர்ருள் போதாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/20&oldid=751013" இலிருந்து மீள்விக்கப்பட்டது