பக்கம்:இலக்கியக் கலை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் சொல்லும் 183 அழகிய கையை நீட்டி, உணவைத் தொட்டும் சிதறியும், வாயில் வைத்தும் நெய் கலந்த சோற்றை மேலே பூசியும் மனமயக்கத்தை உண்டாக்கும் குழந்தைகளைப் பெறாதவர் வாழ்க்கை பயனற்றதாம்.1 . - கவிதைக் கலையில் வல்ல பாண்டியன் அறிவுடை நம்பி குழந்தைச் செல்வத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறான். குழந்தை கள் செய்யும் செயலால் நமக்குச் சில சமயம் கோபமும் சிலசமயம் மகிழ்ச்சியும் உண்டாகின்றன. இவற்றின் இடைப்பட்டுப் பல சமயம் என்ன செய்வதென்று தெரியாது விழிக்கிறோம். மயக்கத்தையே அடைகிறோம். நல்லதோர் உடையுடுத்து வெளியே புறப்படுகையில் சின்னஞ்சிறு கைகளில் நிறைய அழுக்குடன் வந்து உடையைத் தொட்டு அழுக்காக்கி விடுகிறது. துணிக்குப் பஞ்சமான காலத்தில் உடையின் அருமை உடனே கோபத்தை உண்டாக்குகிறது. ஆனால் செம்மனமுடையானுக்குக் குழந்தையின் அருமை அடுத்துநினைவுக்கு வருகிறது. ஓங்கிய கை எறியாது நின்று விடுகிறது. எஞ்சியது மயக்கம் ஒன்றே. இத்தகைய நிலையைக் கவிஞன். காண்கி றான். குழந்தைகளைக் கூறுமிடத்து ஒரு சொல்லால் அடைமொழி தர வேண்டுமென்று நினைக்கிறான். இதை விடச் சிறந்த சொல்லை அவன் கூற முடியாது. மேலும் மயக் குறு என்ற இச்சொல்லை மட்டும் தனியே பயன்படுத்தி இருந்தாற்கூட அது இவ்வளவு சிறப் புற்றிருக்காது. குறு குறு நடந்து' என்ற சொல்லையும், நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் என்ற தொடரையும் தொடர்ந்து இம்மயக்குறு என்ற மொழி வருதல் காண்க. இம்மொழி ஒரு தனிச் சிறப்படைய முன்னர்க் கூறிய இரண்டும் உதவி செய்கின்றன. அவை இரண்டு நம்முள் ஒரு கற்பனையைத் தோற்றுவிக்கின்றன. நடக்க @UNTL೦), தளர்நடைகொண்டு, உண்ணுவதற்கென இருந்த சோற்றைக்கை நிைறய அப்பிக்கொண்டு வரும் குழந்தை நம் அகக்கண்ணில் காட்சி அளிக்கிறது. இந்தக் காட்சியில் தோன்றிய அநுபவத்தை எவ்வாறு கூறலாம் என நாம் நினைக்கும் போதே, கவிஞன் நமக்காகஇச்சொல்லைப் பயன்படுத்திவிடுகிறான்; மயக்கம் என்ற சாதாரணமான சொல், மனத்தடுமாற்றம் என்ற அகராதிப் பொருளையுடைய இச்சொல், ஒரு தனி உலகத்தையே அல்லவா நமக்குக் காட்டுகிறது? ஆகவே பாடலில் ஒரு சொல்லின் மதிப்பை அறியவேண்டுமேயானால், அச்சொல் தோன்றும் சந்தர்ப்பமே அதனை அறிவிக்கும் சிறந்த கருவியாகும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/201&oldid=751015" இலிருந்து மீள்விக்கப்பட்டது