பக்கம்:இலக்கியக் கலை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் சொல்லும் 187 எண்ண ஊட்டுச் சொல் எனவே பலவகைப்பட்ட செயல்களுக்கும் ஒரே சொல் பயன் படுவதால் அச்சொல்லுக்குப் பல எண்ணங்களைத் தோற்றுவிக்கும் ஒரு தன்மை ஏற்பட்டுவிடுகிறது. இத் தன்மையை மேல்நாட்டு 'எண்ணவூட்டுச் சக்தி என்று கூறுவர். இங்ங்ணம் எண்ணங் களைத் தோற்றுவிக்கும் சொற்கள் எவையோ அவற்றையே கவிஞன் கவிதையில் பயன்படுத்த வேண்டும், அதிலும் அச் சொல்லை நன்கு ஆராய்ந்து பயன்படுத்த வேண்டும். இங்ங்னம் பல எண்ணங்களைத் தோற்றுவிக்கும் சக்தி ஒரு சொல்லுக்கு இருப் பினும், அவற்றுள்ளும் சிறப்பாக ஒரு பொருளைக் குறிக்கும் வன்மை அதற்கு இருந்தே தீருமல்லவா? ஆகலின் கவிஞன் சொல்லைப் பயன்படுத்தும்பொழுது, இச்சிறப்பு வன்மை, அப் பொதுப் பண்பு என்ற இரண்டையும் சீர்தூக்கி ஏற்ற சொல்லை ஏற்ற இடத்தில் பயன்படுத்த வேண்டும். இத்தகைய ஒரு சக்தி சொல்லுக்கு இருப்பதால்தான் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் அழகு கவிதைக்கு இயல்பாகிறது. "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்' என்று கவிஞன் வாளா கூறி விட்டு விட்டான். நோக்கினால் விளைந்த பயனைப் பற்றி ஒன்றுமே கூறவில்லை. என்றாலும் என்ன? நேர்க்கு என்ற சொல்லுக்கு வள்ளுவர் பெருமான் பொருள் விரித்து விட்டா ரல்லவா? 'கண்ணொடு கண்ணினை நோக்கு ஒக்கின் வாய்ச் சொற்கள் என்ன பயனு மில" என்ற குறளால் நோக்கு என்ற சொல்லின் எண்ணத்தைத் தோற்றுவிக்கும் சக்தி தெரிவிக்கப் படுகிறதல்லவா? பார்த்து கண்டு, விழித்து என்ற சொற்களைப் போலவேதான், நோக்கி என்ற சொல்லும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நமக்கு, அச்சொல்லின் தனிவன்மை விளக்கப் படுகிறது. எனவே கம்பன் நோக்கினான்’ என்று கூறி வாளா விட்டுவிட்டாலும் அச்சொல்லை அவ்விடத்தில் கண்டவுடன் குறளையும் இச்சொல்லின் பொருளையும் நினைக்கிறோம். தாய்மொழிக் கவிதை பேச்சும், அதனை அறியும் ஆற்றலும் மனிதனுடன் பிறப் பிலேயே தோன்றுவன வல்ல அவை காலாந்தரத்தில் பிறருடன் பேசிப் பழகுவதாலும் பயிற்சி வசத்தாலும் நாம் பெறுபவையே யாகும். தமிழ்நாட்டில் பிறந்த குழந்தை வடநாட்டில் இளமை தொட்டு வளருமாயின் அம் மொழியைப் பேசவும் அவர்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/206&oldid=751020" இலிருந்து மீள்விக்கப்பட்டது