பக்கம்:இலக்கியக் கலை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் சொல்லும் 189 என்று நினைப்பதும் தவறு. இத்தவறான எண்ணம் இன்று தமிழ்நாட்டில் வேரூன்றி வருகிறது. எளிமை என்ற பெயருடன் அருவருப்பான சொற்களெல்லாம் கவிதையில் புகுத்தப்படுகின்றன. வேற்று மொழியாயினும் நம்மிடையே நீக்கமுடியாது பழகிவரும் மோ ட் டார் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். எண்ணத்தைத் தூண்டும் சக்தி அதனிடம் ஏதாவது உண்டா? இல்லையே! இச்சொல்லும் பொருளும் தோன்றி வளருகிற மேல்நாட்டில்கூடக் கவிஞர் கவிதைகளில் இத்தகைய சொற்களை நுழைக்க முயன்று தோல்வியே எய்தினர். இவை அறிவியற் சொற்களேயன்றி, உணர்ச்சிச் சொற்களல்ல, ஆகவே இத்தகைய மொழிகளும், கொச்சை மொழிகளும் கவிதையில் இடம் பெறா. இன்று பேச்சு வழக்கில் ஆயிரக்கணக்கான சொற்களை வழங்கு கிறோம். கொல்லும் தன்மையுடைய கருவிகளில், துப்பாக்கி, பீரங்கி, கத்தி, உடைவாள், சுரிகை முதலிய பலவகை உண்டு. ஒரு கவிதையில் கத்தி அல்லது சுரிகை என்ற சொல் பயன் படுத்தப்படுமாயின், அச் சொற்கள் நமது கற்பனையைத் தூண்டக் காண்கிறோம். கத்தி என்ற சொல் காதிற் பட்டவுடன் எத்தனை வகையான எண்ணக் கேர்வைகள் மனத்திரையில் வருகின்றன? ஆனால் வழக்கில் இருந்துங்கூடத் துப்பாக்கி என்ற சொல் கற்பனையைத் தூண்டுவதில்லை. மறுமலர்ச்சி என்ற பெயரில் விரும் கவிதைகள் அனைத்தும் இந்த அடிப்படை உண்மையை மறந்துவிட்டமையின் அவை கவிதை என்ற பெயருக்கு எவ்வூற்றாலும் தகுதியற்றனவாய் ೬೧767 தோசை ابنائهவடிவமானது என்பதையும் இவர்கள் கவிதை என்கிறார்கள். ஆனால் இதில் கற்பனையைத் தாண்டும் ஒரு சொல்லாவது உண்டா என்று புர்த்தால் உண்மை விளங்கும். கவிதைக்கேற்றது எத்தகைய மொழி என்ற வினாவிற்கு ஒரு முடிவு கூறவேண்டுமேயானால் கீழ்க்கண்டவாறு கூறலாம். "கவிதையில் பயிலும் சொற்கள் வழக்கில் உள்ளனவாக இருத்தல் வேண்டும். ஆனால் வழக்கில் உள்ள சொற்களெல்லாம் கவிதையில் இடம்பெறுத்ல் இயலாத காரியம்.: இதுவரைக் கூறியவற்றால் கவிதைக்கு இன்றியமையாத உறுப்பு, சொற்களே என்பதும், அவை கற்பனையைத் தாண்டக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/208&oldid=751022" இலிருந்து மீள்விக்கப்பட்டது