பக்கம்:இலக்கியக் கலை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம்: அறிமுகம் § இலக்கியம் என்றசொல் வகதியம்’ என்ற ச்ொல் குறிக்கும் பொருளை உணர்த்தாது. - இலக்கியத்தைச் செய்யுள்’ என்பர் பண்டைத் தமிழர். ஆங்கிலேயர், Literature என ஆங்கிலத்தில் சொல்வர். எழுதப் பட்டதெல்லாம் Literature தான். பாட்டு, உரை எவையாயினும் ஒரு பொருள் பற்றி விரித்தெழுதும் அனைத்தையும் தமிழில், செய்யுள் என்பர். வடமொழியில் லசுழியம் என்ற சொற் பொருளை நோக்கின் செய்யுளின் பொருளோடு வேறுபடும் என்பது நாவலர் ச. சோமசுந்தர பாரதியின் கருத்தாகும். - இவ்விரு அறிஞர்களின் கருத்துகளையும் மனத்தில் கொண்டு இவ்வறிஞர்கள் வழிவந்த இக்காலச் சான்றோர்கள் இலக்கியம் எனும் சொல்லிற்குத் தந்துள்ள விளக்கங்கள் சிலவற்றைக் காண்போம். - - - ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள்தரும் விளக்கம் புதுமை யும் முன்மைத் திறனும் (Originality) உடையதாகும். "இலக்கு-இலக்கியம், இலக்கு-இலக்கணம். இலக்கு-குறி; குறிக்கோள். சிறந்த வாழ்க்கைக் குறிக்கோளான, அறத்தை எடுத்துக் காட்டுவது, இலக்கியம். சிறந்த மொழிக் குறிக் கோளான அமைப்பை எடுத்துக் கூறுவது இலக்கணம்...... இலக்கணத்திற்கு அணங்கம் என்றும் இலக்கியத்திற்கு அணங்கியம் என்றும் பெயருண்டு. இலக்கு-லக்ஷய(வ), இலக்கியம்-லக்ஷய (வ), இலக்கணம்இலகூடிணம்(வ). இலக்கணம், இலக்கியம் என்னும் சொற்கள் போல் லக்ஷண, லக்ஷய என்னும் வடசொற்கள் ம்ெiழியமைதி யையும் (Grammar) நூற்றொகுதியையும் (Literature) குறிப்ப தில்லை" என்பது பாவாணரின் துணிபாகும். இத்தகைய எண்ணப் போக்கே பரவலாகத் தமிழ் அறிஞர்கள் இடையே நிலவி வருகிறது. - அண்மைக்காலத்தில் பேராசிரியர் ந. சஞ்சீவி அவர்கள் இலக்கணம் இலக்கியம் என்ற சொற்கள், இலக்கு எனும் தமிழ் வேருடையன. 'இலக்கு' என்ற சொல்லும், இலங்கு’ எனும், சொல்லின் வலித்தல் விகாரமோ? இவ்வாறு எண்ணத் தூண்டுவது பழந்தமிழ் நூல்களில், இலங்கு எனும் சொல், ஏராளமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/21&oldid=751024" இலிருந்து மீள்விக்கப்பட்டது