பக்கம்:இலக்கியக் கலை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 இலக்கியக் ്റ്റ് காரியம். அவற்றை உள்ளவாறே கவிஞன் கூறினால், அவன் எவ்வளவு சிறந்த முறையில் கூறினாலும் அவை நம்மால் விரும்பத்தகாதவையாய் முடியும். அத்தகைய சந்தர்ப்பங்களில் இறைச்சிப் பொருளைக் கையாண்டு கவிஞன் தன் கருத்தை வெளியிடுகிறான். நேரே கூறமுடியாத பொருளைக் கூறக் கவிஞன் கையாளுகிற வழி எத்தனை சிறந்தது என்று இதிலிருந்து காண்டல் கூடும். ஒரு தலைவன் நீண்ட நாளாகத் தலைவியின் மாட்டு வந்து களவில் ஈடுபடுகிறான். மணஞ் செய்துகொண்டு இல்வாழ்க்கையில் ஈடுபட வேறு தடைகள் இருந்தன பேர்லும், ஆனாலும் இச்செயல் சிறிது சிறிதாக ஊரார் கர்திக்கு. எட்டிவிட்டது. - அவர்களும் மறைவாய் நடக்கின்ற இச் செயலுக்கு எவ்வவவு. அறிவிப்புச் செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்துவிட்டனர். ஆண்மகனாகிய அவன் இது தெரிந்தும் வாளர் இருந்துவிடுகிறான். ஆனால் தலைவிக்கு ತಿಣ வருத்தத்தை உண்டாக்குகிறது. . அதனை நேரே தோழியிடம் கூறுவதுகூட முறையற்றதாகிவிடும். தலைவன் மாட்டுத்தான் வெறுப்புக் கொண்டதாகத் தோழி நினைத்துவிடின் அதனைவிடத் தவறானது ஒன்றுமில்லை, ஆனாலும் அத்தகைய களவு வாழ்க்கை நீடிப்பதால் ஏற்படும் துன்பங்க்ளை நினைப்பதால் வருத்தம் மிகுகிறது. எனவே ஒரு நாள் மனந்துணிந்து கூற முற்பட்டாள். அன்று தலைவன் தலைவியைக் காண வந்துள்ளான்; வேலியின் அப்பால் நிற்கின்றான். அதனை அறிந்த தல்ைவி தோழியினிடம் - சொல்லுவாள் போலக் கூறத்ெ தாடங்குகிறாள். தோழி, ஈசல்களையுடைய புற்றில் கைவிட்டுப் புற்றாஞ் சோற்றை எடுக்கக் கர்டி முற்பட்டவுடன், அப்புற்றினுள் இருக்கும் பாம்பின் தலையில் கரடியின் நக்ம் படுத்லால் புண் உண்டாகி அதன் வலிமை கெடும் இரவு நேரத்தில் நாம் அவரது மலைநாட்டில் செல்லக் கருதுவோம். ஆனால் அம்மலைநாடு தான் எத்தகையது பெரிய ஆண் பன்றியினைக் கொன்ற ஆண் புலியானது அப்பன்றியை நல்ல மணங்கமழும் பலாத்தோட்டத்தின் நடுவே * புலால் நாற்றம் உண்டாகும்படி இழுத் துச்செல்கி றது. மேலும் ஆண்யானையும் பெண்யானையும் வாழைக்குலையை உண்ணுவதற்காக வாழைத் தோட்டத்தில் புகுகின்றன. ஆனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/211&oldid=751026" இலிருந்து மீள்விக்கப்பட்டது