பக்கம்:இலக்கியக் கலை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 இலக்கியக் கனில் நிலங்களில் - நடைபெறும் செயலே கூறப்படுகிறது. என்றாலும் தலைவனுக்குத்தான் எவ்வளவு சூடு கொடுக்கப்படுகிறது! மேல் நோக்காகப் பார்த்து விட்டுவிட்டால் வெறும் வருணனை என்ற அளவில் நின்றுவிடும். ஏன் இவ்வாறு கூறவேண்டும் என்ற கேள்வி யைப் பிறப்பித்தவுடன். அக்கேள்வி ஒரு பெரிய கருவூலத்தைத் திறந்துவிடும். பார்ப்பதற்குச் சாதாரணமாகக் காணப்படும் இவ் வருணனையில் எண்ணற்ற பெ ருட்சிறப்பு. அமைந்து கிடப்பது விளங்கும். இப்பாடல்களுக்குக் குறிப்புரை எழுதி விட்டுச்சென்ற உரையாசிரியர் இப்பண்பாடுகளையெல்லாம் எடுத்து விளக்கிக் சென்றிருக்கிறார், ஈயல் புற்றத்து என்பதிலிருந்து 'பாம்பு மதனழியும் என்பதுவரை இரவில் நடைபெறுகிற ஒரு செயல். அந்தக் காட்சியை நின்று நினைப்போமாக. பாம்புக்குத் துன்பம் செய்யவேண்டு மென்பது கரடியின் கருத்தன்று. தன் காரியமாகிய உணவைத் தேடக் கரடி புற்றில் கைவிட்டது. ஆனால் அதன் நகம் பட்ட அளவிலே பாம்பு வருந்தும்படி ஆகிவிட்டது. அதே போலத் தலைவிக்குத் துன்பம் தரவேண்டும் என்ற எண்ணம் சிறிதும் தலைவனுக்கு இல்லை. அவன் தனது இன்பத்தை நாடித் தலைவி யின் இல்லத்திற்கு இரவு நேரத்தில் வரத்தலைப்பட்டான். சற்றும் எதிர்பாரா விதமாகப் பாம்பிற்குக் கரடியின் நகம் துன்பம் உண்டாக்கினதுபோல் அவன் வரவால் தலைவியின் குடும்பத்திற்கு இகழ்ச்சி வரலாயிற்று. பாம்பிற்குத் தலைவியின் குடும்பமும், கரடிக்குத் தலைவனும் ஒருவாறு உவமையாயின. இனி அடுத்து, கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை என்பது முதல் புலாவ ஈர்க்கும் என்பதுவரை மலைகளில் ந்டைபெறுகிற மற்றொரு செயலாகும். புலியானது நல்ல வாசனை வீசும் பலாத் தோப்பை நாற்றமடையச் செய்யவேண்டும் என்னும் கருத்துடைய தன்று. அது தான் உண்ணுவதற்காகப் பன்றியைக் ... கொன்று அதனை இழுத்துப்போகையில் எதிர்பாராவிதமாகப் பலாத்தோப்பு நாற்றத்தைப் பெறுகிறது.புலியின்மேல் தவறு கூறவும் வழியில்லை. காரணம் அதன்வழியே அது செல்கிறது. பலாத் தோப்பு புலி செல்லும் வழியில் அமைந்திருப்பது யார் குற்றமுமன்று, அது போலத் தலைவன் தனது இன்பத்தின் காரணமாக நம்மிடம் வருகிறான். அது அவன் மேல் தவறில்லை. * . ஆனால் நல்ல பலாத் தோப்பு நாற்றத்தை அடைந்ததுபோலப் புகழ் நிறைந்த நமது "குடியும் இகழ்ச்சியை எய்தல்ாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/213&oldid=751028" இலிருந்து மீள்விக்கப்பட்டது