பக்கம்:இலக்கியக் கலை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் ஆட்சிச் சிறப்பு - 195 அடுத்துத் தோன்றும் வாழையொடு என்பதிவிருந்து, விடரகத்து இயம்பும் என்பது வரையில் மற்றொரு காட்சியாகும். இதில் தலைவி தனது கருத்து முழுவதையும் கூறி விடுகிறாள். மேலே கூறிய இரண்டோடு நிறுத்திவிடின் ஒரு தவறு நேரும். தலைவன் வருவதால் அவன் மட்டுமா இன்பம் அடைகிறான்? தலைவிக்கும் அதில் சமமான பங்கு உண்டல்லவா? ஆனால் முற்கூறிய இரண்டு காட்சியாலும் தலைவிக்காகத் தலைவன் வந்த தாகத் தெரியவில்லையல்லவா? புலியும் கரடியும் தங்கள் செயலைச் செய்யப் பலாத்தோப்பும் பாம்பும் துன்பமடைந்தன என்றால் அது அவன்மேல் தவறாய் முடியுமன்றோ? எனவே இம்மூன்றாவது காட்சியில் தலைவி இச்செயலில் தனக்குள்ள பங்கைக் கூறிவிடு கிறாள். ஆண் யானை பெண்யானை என்ற இரண்டும் வாழைக் கனி உண்ண வந்தன என்றமையால் இன்பம் இருவருக்கும் பொது வானது என்ற உண்மையைக் கூறினாள். அச்செயலில் ஆண் யானையாகிய களிறு எதிர் பாராமல் குழியில் வீழ்ந்துவிட்டது என்றமையால் களவொழுக்கமாகிய கனியை உண்ணவந்த தலைவன் வீட்டுக் காவல், ஊர்காவல் முதலியவற்றில் அகப்பட்டுக் கொள்கிறான் என்பதும், குழியில் விழுந்த களிறு கனி உண்ண முடியாமற்ற போனதுபோலத் தலைவனும்மேற்கொண்டு களவில் ஈடுபட முடியாமல் போய்விட்டது என்பதும் கூறினாளர்யிற்று. மேலும் பெண்யானை குழியிலிருந்து களிற்றைக் காப்பாற்ற 'மரக்கிளையை முறிக்கப் புகுந்தது, தலைவி தர்னே தாய் முதலிய வர்களிடம் கூறி மணவினைக்கு ஏற்பாடு செய்யத் துணிந்தமையைக் கூறிற்று. ஆனால் அம்மரக்கிளை ஒடிக்கின்ற ஒலியால் ஊராரெல் லாம் களிறு குழியில் வீழ்ந்ததை அறிந்துகொண்டமைபோலத் தலைவி மணவினைக்குச் செய்த அறத்தொடு நிற்றல் முதலிய முயற்சியால் ஊராரெல்லாம் இவர்கள் களவொழுக்கத்தையும், அதில் தலைவன் இடர்ப்பட்டமையையும் அறிந்து பழி கூறுவாரா யினர், i-, . . . * * ". • + - * . . . . இதனைவிட மிகுதியாக யாரும் இடித்துக் கூற முடியாது, அறிவுடையாரெவரும் தாம் பிறந்த குடிக்கு இழுக்கு வருமாறு நடந்துகொள்ள மாட்டார். எனவே தனது குடிக்குத் தன்ன்ால் இழுக்கு நேர்வதாயிற்று என்ற கருத்தை மீண்டும் மீண்டும் தலைவி வற்புறுத்துவாளாயினாள். இனி இதனை விட்டுக் க்விதைக்கு வருவோம். இத்தகைய ஒரு கருத்தை நேரடியாகக் கூறுதல் அநாகரிகமாகும். உண்மையையும் கூறவேண்டும். அதையும் பண்பாட்டோடு கூறவேண்டும். இதனைவிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/214&oldid=751029" இலிருந்து மீள்விக்கப்பட்டது