பக்கம்:இலக்கியக் கலை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 இலக்கியக் கலை சிறந்த முறை யாது? நாம் இத்தகைய கருத்தை நினைப்பதே இயலாத காரியம். கவிஞனே அவ்வாறு நினைக்கமுடியும். அதனையும் அவன் கூறுகிற வழியே வேறு. கவிதையை அநுபவிக்க வேண்டுமாயின் கவிஞன் வழியை நன்கு அறிந்து அவ்வழியே சென்றால் நல்ல பயனை அடையமுடியும். அடைமொழிப் பயன் இது நிற்க. ஒரு சொல்லிலேயே பல கருத்துக்கள் அடங்கக் கூறும் aಣgujá ೭೯ir®. ஒரு பெரிய கருத்தை இங்ஙனம் ஒரு சொல்லில் சுறும் கவிஞனது வன்மை வியக்கத் . தகுந்தது. சில வற்றிற்கு அடைமொழி கொடுத்துப் பாடும் வழக்கு தமிழ்க் கவிதையில் மிகுதியும் உண்டு. அடைமொழிகளை மிகுதியும் கேட்ட பழக்கத்தால் பல இடங்களில் நாம் அடைமொழியின் உண்மைப்பொருளை ஆராயாது மேலே சென்றுவிடுகிறோம். அதனால் கவிதையின் பொருட் சிறப்பை இழக்க நேரிடுகிறது. சாதாரணமாக இடைக்காலக் கவிதைகளிலும் பாடல்களிலும் பெண்களைத் திருமகளுக்கு உவமித்துப் பாடும் இயல்பு வழக்கிற்கு வந்துவிட்டது. அதனைப் பலரும் பயன்படுத்தினும் இடத்திற் கேற்பப் பொருள் விரிக்கும் வன்மை சொற்களுக்கு உண்டு என்பதை நினைவிலிருத்துவோமேயாயின் அதனால் சிறந்த பொருளைப் பெறுதல் கூடும். சீதையைப் பற்றிக் கம்பநாடர் அங்கனம் மையறு மலரின் நீங்கி யான்செய்மா தவத்தின் வந்து செய்யவள் இருந்தாள். (கம். மிதி. கா. படவம்-1) குற்றமற்ற தாமரை மலரிலிருந்து நீங்கி நான் செய்த அதிக தவத்தின் காரணமாகத் திருமகளே என்னிடம் , வாழ்கிறாள்.1 சீதையை இலக்குமியாக உருவகிக்கிறார் கவிஞர். அதிலும் "சொல்லழகு காணப்படுகிறது. மையறு என்று மலருக்கும், யான் பையின் மலரினிடத்துக் கண்டவெறுப்பால் என்பால் வேறு வழி பயிலகதுஆத்தாள் ஒன்று நினைவற்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/215&oldid=751030" இலிருந்து மீள்விக்கப்பட்டது