பக்கம்:இலக்கியக் கலை.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் ஆட்சிச் சிறப்பு 199 பட்டியிருப்பின் தவறுடைய தாகாது. ஆனால் அம்மையார் . அத்தகையரல்லர் என்பதையும் குறிப்பால் உணர்த்த வேண்டிய ஆசிரியர் அவரது உடல் அழகு, மன அழகு இரண்டையும் குறிக்க இவ்வொரே உவமையை இச் சந்தர்ப்பத்தில் கையாண்டார் என்றால் கவிதை பொருள் சிறக்கும் இடங்களில் அடைமொழியும் ஒன்றெனக் கூறவும் வேண்டுமோ? காரைக்கால் அம்மையாருக்கும் பரமதத்தன் என்ற வணிகனுக் கும் மணம் நடந்தது என்று கூறும்பொழுதே ஆசிரியர் அழகிய முறையில் அச் செயலைக் குறிப்பிடுகிறார். உலகம், பொருள், இன்பம் என்ற இவற்றையன்றி வேறொன்றைக் கனவிலும் காணாத வணிகன் அவன். அவரேர்வெனில் இறைவன் மாட்டுக் கொண்ட அன்பைத் தவிர வேறு உலகியல் ஒன்றும் பற்றாதவர். இவ்விரு வர்க்கும் இடையே நடக்கும் மணம் பொருத்தமற்றதும், கேடு விளைப்பதுமாகும் என்று ஆசிரியர் அறிகிறார். ஆனால் அதனை நேரடியாக முன்னரே கூறினால் கவிதையில் அமங்கலத்தைக் கூறிய இழுக்கு அவர்பால் சாரும் எனவே கவிஞர் அழகாகத் தம் கருத்தை யும் விடாது அமங்கலம் கூறிய தவற்றிற்கும் ஆளாகாது அழகிய முறையில், 'தளிர் அடிமென் நகைமயிலைத் தாது அவிழ் தார்க் காளைக்கு, களிமகிழ் சுற்றம்போற்றக் கலியாணம் செய் தார்கள்” என்று கூறுகிறார். மென்மையும் தண்மையும், இன்பமும் அழகும் உடைய மயில் எங்கே? முரட்டுத்தனமும், கொண்டது முடிக்கும் இயல்பும், வன்மையும், வெம்மையும், உடலாற்றலும் உடைய காளை எங்கே? இவை இரண்டிற்கும் பொதுத் தன்மை ஏதாவது இருத்தல் கூடுமா? பொதுத் தன்மை ஒன்றுகூட இல்லாத விடத்து, வாழ்க்கையில் இன்பம் அடைமுடியுமா? பின்னர் ஏன் மணம் நடைபெற்றது? சுற்றத்தார் விருப்பப்படி நடந்தது. இவ் வளவு பொருட் சிறப்பையும் உள்ளடக்கி சுற்றத்தார் மகிழ்ச்சிக்காக மயிலை மாட்டுக்கு மணஞ் செய்து தந்தனர் எனக் கூறினார் ஆசிரியர். இங்ங்ணம் தக்க சொல்லைத் தக்க இடத்தில் பயன் படுத்திச் சிறந்த பொருளைப் பெறவைக்கும் முறை சிறந்த கவிஞனுக்கு இயல்பு. அடைமொழி என்று கருதி நாம் அதனைத் தள்ளிவிடுதல் ஆகாது, அரசனுக்கு அறிவுரை வழங்குகிறார் ஒரு புலவர். உலகத் திற்கு,நெல்லும் உயிரன்று. நீரும் உயிரன்று. மன்னனே உலகுக்கு உயிர். ஆதலால் அறிவுடை மன்னன் இதனை உணர்ந்து நடத்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/218&oldid=751033" இலிருந்து மீள்விக்கப்பட்டது