பக்கம்:இலக்கியக் கலை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 இலக்கியக் கலை இடங்களில் பயின்று வருவதாலேயேயாகும். இலக்கு என்னும் சொல்லும்பொருளும் புறநானூற்றில், "தோல், துவைத்து அம்பின்துளைதோன்றுவ நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன (புறநானூறு. 4.) 'உடம்பே கானச் சீறியாற்று அரங்கரைக் காலுற்று கம்பமொடு துளங்கிய இலக்கம் போல' (புறநானூறு. 260) எனும் பாடல்களில் நன்கு ஆட்சிபெற்றுள்ளன. இதனினும் சிறப்புடையதாய்க் குறிக்கத்தக்கது, எல்லே இலக்கம்” (தொல். சொல் 7: 21) என்னும் தொல்காப்பிய நூற்பாவேயாகும். இதனால் இலக்கம்’ என்னும் சொல்லுக்கு விளக்கம் என்னும் பொருள் இருத்தல் வெளிப்படை. எனவே இலக்கியம், இலக்கு (குறியும் விளக்க மும்') என்னும் வேர்ப்பொருளில் இருந்து, விளைந்திருக்கும் எனும் எண்ணம் உரம் பெறுகிறது' என்று அறிவித்துள்ளார். மேற்கண்ட அறிஞர்களின் கருத்துரைகளினால், இலக்கம்' எனும் சொல் இலக்கு’ எனும் வேர்ச்சொல் அடியாகப் பிறந்தது என்பது புலனாகிறது. இலக்கு என்னும் சொல்லுக்கு, எண்ணம், எதிர், ஒட்டம், ஒப்பு, குறிப்பு, சமயம், நேர், குறிப்பொருள், அம்பு எறியும் அடையாளம், இடம், நாடியபொருள், எதிரி, அளவு, இலங்குதல், விளக்கம், இலக்கம் எனும் இருபது பெர்ருள்களை மதுரைத் தமிழ்ப் பேரகராதி தருகிறது." - இவையாவும், யாதோ ஒரு குறிக்கோளோடு படைக்கப்படுவதே "இலக்கியம் எனும் பொருளைத் தெரிவிக்கின்றன. பொழுது போக்கிற்கு மட்டும் பயன்படும் நூல்களை, நம் முன்னோர்கள் நினைத்துப்பார்க்கவும் இல்லை என்பது இதனால், புலப்படுகிறது. இந்தக் கருத்தினை, 1.அறம்பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே" (நன். 10) என்று பவணந்தியார் எடுத்துரைத்துள்ளார். . - - பேராசிரியர் கா. சு. பிள்ளை அவர்களின் கருத்தைத் தழுவி, தமிழ்மொழி ஆராய்ச்சியில் வல்லுநர்களான ஞா. தேவநேயப் பாவாணரும் டாக்டர் சி. இலக்குவனாரும், இலக்கியம்' எனும் சொல்லைத் தனித்தமிழ்ச் சொல்லாகவே போற்றியுள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/22&oldid=751035" இலிருந்து மீள்விக்கப்பட்டது