பக்கம்:இலக்கியக் கலை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 16 ஒசைச் சிறப்பு அசையும் சீரும் கவிதையை அச்சடித்த ஏட்டில் காணும்பொழுதே, ೫5ಣ டைய சீர்கள் பிரித்து அச்சியற்றப்பட்டுள்ள முறை, நமது மனத்தில் ஒருவகை ஓசையை உண்டாக்கிவிடுகிறது. உடனே மனத்துள்ளே படித்துப் பார்க்கிறோம். ஆனால் ஏதோ ஓரிடத்தில் ஒசை குறைவதாகவோ மிகுவதாகவோ பட்டால் உடனே அவ் வடியை உரக்கப் படித்துப் பார்க்கிறோம். மனத்துள் படித்ததும் நாம்தாம். இப்பொழுது உரக்கப் படித்துப் பார்ப்பதும் நமக்காகத் தான். ஏன் அங்கனம் செய்கிறோம்? ஓசையை அளவிடுவதில் நமது மனத்தையும் கண்ணையும் விடச் செவிகள் கூர்மை வாய்ந் தவை. எனவே உரக்கப் படித்துச் செவிகளைக் கேட்குமாறு செய்கிறோம். இவ்வியல்பிலிருந்தே இழும் என்பதை அநுபவிக்கப் பழகுகிறோம். இங்ஙனம் ஒலியை அநுபவிக்கும் வன்மை மனத்திற்கு இயற்கையாக அமைந்துள்ளது. கடிகாரத்தில் டிக்-டாக் சப்தத் திலும், புகை வண்டிச் சக்கரங்களின் ஒட்டத்திலும் இந்த இழுமை நாம் அநுபவிக்கிறோம். கடிகாரத்திலும், புகைவண்டிச் சக்கரத் திலும் தனிப்பட்ட ஒலி ஒன்றுமில்லா விட்டாலும் அவற்றைக் கேட்கும் நம் மனத்தில் இக்குறிப்புத் தோன்றாமற் போகாது. இவ்வோசையைக் கேட்கும்.இருவர் மனத்தில் ஒரே வகையான இழுமை இவை உண்டாக்குவதில்லை. காரணம் இருவர் மனமும் . வெவ்வேறு நிலைகளில் இருப்பதுதான். ஒரே கவிதையை இருவர் படிப்பதாக வைத்துக்கொள்வோம். ஒருவர் கால அளவை அறுதியிட்டுப் படிப்பதில் அதிகக் கவனம் செலுத்துவார். மற்றவர் சொற்களின் அழுத்தத்தில் அதிகக் கவனம் செலுத்துவார். இவ்விரு வகையினரையும் காண்கிறோ மாயினும் ஒருவர் மற்றத்தில் கவனமே செலுத்துவதில்லை என்ற கருத்தில்லை. இசைப் பயிற்சி மிகுதியும் உடையார் கவிதையைப் படிக்கும்பொழுதுதாள. அறுதியில் நின்று படிப்பர். கவிதையைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/221&oldid=751037" இலிருந்து மீள்விக்கப்பட்டது