பக்கம்:இலக்கியக் கலை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒசைச் சிறப்பு 203 பொகுட் சிறப்பு நோக்கிக் கற்பவர், சொற்களின் பொருள் வேறு படும் தன்மை நோக்கி அவற்றில் அழுத்தம் தந்து படிப்பர். ஒலிக் குறிப்பு நிறைந்துள்ளதே கவிதை என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் விருத்தப்பாக்களைக் கூடப் பண் போன்று படிக்கவேண்டுமென்று கூறும்பொழுதுதான் கருத்து வேறுபாடு தோன்றுகிறது. இந்த இழும் என்னும் ஒச்ை கவிதைகளைப் பிரித்து இன்ன பாவால் ஆயது என்று கூறுவதற்கு உதவியாக உள்ளது. "இழும் என் மொழியால் விழுமியது நுவலல்' என்பதை ஆசிரியர் தொல் காப்பியனார் தோல்' என்று கூறப்படும் செய்யுள் வனப்புக்கு ஒர் அங்கமாகக் கூறினாரேனும் செய்யுள் முழுவதற்கும் ஒத்துவரும் ஒர் உறுப்பேயாகும் அது. இனி இழும் என்ற சொல்லுக்குப் பொருள் விரிக்கப் புகு ந்த பேராசிரியர் மெல் என்ற சொல்லான் என்று கூறிப்போனார். ஆனால் இழும் என்றசொல் ஓச்ை யளவில் நின்று பொருளுணர்த்தும் ஓர் ஒலிக்குறிப்புச் சொல் போலாகும். இவ்வழகிய ஒலிக்குறிப்பு, செய்யுட்கு இன்றியமை, யாது வேண்டப்படும் ஓர் உறுப்பாகும். இதனை அளத்தலும் வரிசைப்படுத்தலும் எளிதன்று எனினும், ஒலிக்குறிப்பை அளக்கவே. இயலாது என்பதும் இல்லை. செய்யுளிலக்கணங்கள் கூறும் அசை, சீர். தளை என்பன இப்பயன் கருதி எழுந்தனவேயாம். ஆனால் இன்ன அசைகள் இத்தனை வந்தால் இன்ன ஓசை அதற்கு உண்டு என்று அறுதி இட்டுக் கூறல் இயலாது அவ்வோசையும் ஒலிக் குறிப்பும் கவிதையில் பயன்படும் எழுத்துக்களின் தன்மைக்கு ஏற்ப உண்டர்கும். உதாரணமாக, ஒற்றெழுத்துக்களை அசை, சீர் கணக்கெடுக்கும் பொழுது கணக்கில் சேர்ப்பதில்லை. ஆனால் ஒரே அளவுள்ள் அசை, சீர்களில் இவ்வொற்றுக்கள் ஒலிக்குறிப் பையே மாற்றிவிடும். சில இடங்களில் ஒலியின் உயிர்நாடியாக இவை அமைதலும் உண்டு. இரு சிறை விசிக் கலுமுன் பறந்து வரும் இயல்பை அநேகர் கண்டிருப்பர். ஏனைய பறவைகள் வேகமாகச் செல்கையில் ஒரே நேரத்தில் இரண்டு சிறகுகளையும் மேலும் கீழும் அடித்துப் பறப்பதையும், கருடன் மட்டும் சிறகுகள் அசைவது புலப்படாமலும், கூர்ந்து நோக்கியபொழுது மாறி மாறி ஒவ்வொரு சிறகை அடித்துக்கொண்டு வருவதையும். காணலாம். இவ்வியல்பை ஆசிரியர் கம்பநாடர் கூறுகிறார். - படிக்கும்பொழுது கருடன் பறந்து வருவதை மனம் நன்கு உணரும், ! - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/222&oldid=751038" இலிருந்து மீள்விக்கப்பட்டது