பக்கம்:இலக்கியக் கலை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 இலக்கியக் கலை "காதங்கள் கோடி கடை சென்று கானும் நயனங்கள் வாரி,கலுழக் - கேதங்கள் கூர அயர்கின்ற வள்ளல் திருமேனி கண்டு கிளர்வான்' (கம்பன். நாகபசப்படலம்-245) - [35m. காததாரம் பார்க்கும் கண்களில் கண்ணிர் வழிய, துக்க மிகுதியால் அயர்ந்திருக்கும் இராமனைப் பார்த்துப் பூரித்து) தடித்த எழுத்துக்களில் அழுத்தம் தந்து பாட்டைப் படிந்தால், உண்மை விளங்கும். ஒருவர் படித்து மகிழுகின்ற விதத்திலேயே மற்றொருவர் படிக்க முடியும் என்பது கருத்தன் று. இவற்றை ஆக்கும் கவிஞன் இவ்வொலிக்குறிப்பு நுணுக்கத்தை நன்கு அறிந் தவன். மேலும் வரி வடிவில் ஒன்றாயினும் ஒரே எழுத்து, தான் பயன்படும் இடத்திற்கு ஏற்ப, வெவ்வேறு ஒலிகளை மேற்கிொள்ளும் என்ற உண்மை நாம் அறிந்த ஒன்றே. இதனையே கவிஞன் பயன் படுத்திக் கொள்ளுகிறான். மெல்லின ஒற்றெழுத்து வன்மையற்றது தான். ஆனால் அதனையே இரண்டு வல்லினங்களின் இடையே நிறுத்துவதாலும், அம்மெல்லின மெய்யில் அழுத்தம் விழுமாறு சொல்லை அமைப்பதாலும் இயற்கையாக அவ்வெழுத்திற்கு உரிய இயல்பைப் பிரித்து வேறு இயல்பைத் தந்துவிடுகிறான். இப்பண் அளவுக்கு உட்படாதது என்பது கூறத் தேவை இல்லை. இலக்கண் வழு இல்லாமல் கவிதை இயற்றலாம். ஆனால் அது சிறந்த ஓசை உடைதாயிருக்க வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை, எனவே ஓசைச் சிறப்பைத் தருதல் கவிஞன் வன்மைக்கேற்ப மாறு படும். ஒசையால் பொருள் விளங்க வைத்தலும் அவனது வன்மையைப் பற்றியதே. இங்கு ஓசை என்று கூறப்படுவது பெரும்பாலும் பாடல் வகையைப் பற்றியதே ஆசிரிய்ம், க்லி, வெண்பா போன்ற வைகள் தமக்கென்த் தனி ஒசை உடையவை. விருத்தப்பர் என்று கூறப்படும் வரிசையில் பலவித ஒசை வேறுபாடுகள் காட்டப்படலாம். கலிவிருத்தம் என்பது நான்கு சீர்களான் அமைந்தது தான். எனினும் மேலே கூறிய முறையில் எழுத்துக்கள்ைச் சேர்த்துப் பாடுவ்தால் பலவிதமான ஓசை நயங்களைப் பெறுதல் கூடும். கம்பநாடன் கலிவிருத்தத்தில் ஏறத்தாழ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/223&oldid=751039" இலிருந்து மீள்விக்கப்பட்டது