பக்கம்:இலக்கியக் கலை.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£66 இலக்கிய்க் கலை காணப்படும் ஒசையும் அவ்வாறே. சிறுசிறு மொழிகளின் ஒசையும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு பெரிய ஓசையை உண்டாக்குகிறது. இப்பெரும் ஒசை பல தொடருகையில்தான் இழும் ஒலி தோன்றுகிறது. இந்த இழும் ஒலியும், சொற்களின் பொருளும் ஒரே காலத்தில் மனத்தில் பதிவதால் உணர்ச்சி பிறக்கிறது. கீழ்வரும் கவிதையைக் காண்க : தேர்ஒலிக்க மாஒலிக்கத் திசைஒலிக்கும் புகழ்க்காஞ்சி ஊர்ஒலிக்கும் பெருவண்ணார் எனஒண்ணா உண்மையினார் நீர்ஒலிக்க அராஇரைக்க கிலாமு கிழ்க்கும் திருமுடியார் பேர்ஒலிக்க உருகுமவர்க் கொலிப்பர்பெரு விருப்பினொடும்.' (திருக்குறிப்புத்தொண்டர் புராணம் -118) ஒசைதரும் பொருள் இப்பாடலில் ஒலி என்ற சொல் பலமுறை பயன் படுத்தப்படுகிறது. ஏழு முறை ஒரே சொல்லை ஏறத்தாழ ஒரே பொருளில் வழங்குகிறார்: ஆனால் அவ்வாறு வழங்குகையிலேயே பெர்ருளையும் விளக்கிவிடுகிறார். தேரும் குதிரையும் ஓயாது விதியில் நடமாடிக் கொண்டிருந்தால் எத்தகைய ஒலி உண்டாகுமோ அதனைப் பாடலைப் படிப்பவர் மனத்தில் உண்டாகுமாறு செய்துவிடுகிறார். இந்நினைவை உண்டாக்கியது இக்கவிதையின் ஓசையே என்பதை யாரும் மனத்தில் மறுக்க முடியாது. கவிதையின் பொருளும் அதுவே யாதலின் இவ்வோசை செய்த தனியழகு ஒன்றுமில்லை என்று சிலர் கருதலாம். அங்ங்னம் கூறுவோர் ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஆதியில் சொற்களின் ஒலிகளே பொருள்களின் குறியீடாக நின்றுவந்தன. இன்றும் நாம் பேசுகையில் அவ்விதமே உள்ளது. ஒர் எழுத்துக்கூடப் படிக்க அறியாதவர் நாம் புத்தகம் என்று கூறினவுடன் அதனைப் புரிந்து, அச்சொல் குறிக்கும் பொருளை உண்ர்ந்து கொள்கிறார் என்றால் புத்தகம்' என்ற சொல்லின் ஒலியே அப்பொருளின் குறியீடாக உள்ளது என்பதற்கு ஐயமில்லையன்றோ? ஆனால் எழுத்து வழக்கு ஏற்பட்ட பின்னர் இது மாறலாயிற்று. புத்தகம்' என்ற ஐந்து எழுத்துக்களும் நேரே ஒரு பொருளைக் குறிக்காமல் அவ்வொலிக்குக் குறியீடாய் நின்றன. நாளாவட்டத்தில் வரிவடிவம் ஒலியின் குறியீடு, பின்ஒலி பொருளின் குறியீடு என்ற தன்மை மாறி நேரே வரிவடிவம் பொருளைக் குறிக்கத் தொடங்கிற்று. இதனாலே நாம் எதின்னயும் மனத்துள்ளேயே படிக்கும் வழக்கத்தை மேற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/225&oldid=751041" இலிருந்து மீள்விக்கப்பட்டது