பக்கம்:இலக்கியக் கலை.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒசைச்சிறப்பு. 209 படுத்துவதாலும், நீண்டதும் குட்டையானதும் ஆன சீர், அசைகளைப் பயன்படுத்துவதாலும் இச்சிறப்பை உண்டாக்கிக் கொண்டனர். இரணியன் தூணைப் பிளக்கிறான்; நரசிம்மமூர்த்தி வெளிப்படுகிறது; சிறிதாக வெளிப்பட்டு விசுவரூபம் எடுக்கிறது. இதோ அக்கருத்தைக் கவிஞன் கூறுகிறான். விருத்தப் பாடல் எவ்வளவு அவனுக்கு உதவுகிறதென்று காண்டல் வேண்டும். பிளந்தது துணுமாங்கே பிறந்ததுசீயம்; பின்னை வளர்ந்தது திசைகளெட்டும் பகிரண்டமுதல மற்றும் அளந்தது; அப் புறத்துச் செய்கையா ரறிந்தறைய கிற்பார்; கிளர்ந்தது ககனமுட்டை கிழிந்தது.கீழும் மேலும். -- - (கம்பன்- இரணி வதை, 180) ஆனால் சங்கச் செய்யுட்களில் இவ் வேறுபாட்டை நன்கு உணர முடிகிறது. ஓர் இயற்கைக் காட்சியைக் கண்டு அதனைக் கூறுவதிலேயோ, அன்றி ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் கூறுவதிலேயோ எண்ணம் விரைவாகச் செல்கிறது. நின்று, கற்பனை ச்ெய்து அநுபவிக்கக்கூடிய பண்பு அவ்விடங்களில் மிகுதியும் இல்லை. இத்தகைய சந்தர்ப்பங்களில் குறைந்த அளவுடைய சீர்களால் ஆகிய ஆசிரியப்பாக்கள் (ஏறத்தாழ ஆங்கிலத்தில் Blank Verse என்று கூறப்படும் இனத்தை ஒத்தவை) மிகுதியும் பயன்படும். கடல் முகட்டில் நின்று கவிஞன் காலைக் கதிரவன் கருங்கடல் வளைவில்.தோன்றும் காட்சியைக் காண்கிறான். அதன் அழகில் ஈடுபடுகிறான். கவிஞனாதலின் அவன் மனம் உடன்ே ஒர் உவமையைக்கான விரைகிறது. மனிதனின் கைத்திறத்திலும் கற்பன்ைத்திறத்திலும், கட்டுப்படாத இவ்வழ்குக்கு, அழகே வடிவான முருகனே உவமையர்தல் கூடும் என்று அவன் மனம் நினைத்துக் கொண்டே செல்கிறது. உடனே கவிதை பிறக்கிறது. 'உலகம் உவப்ப வலன்ேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு w = a + - * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * ഒstiത്തണ്ട് தியற்றக் கவின்பெறு வனப்பு (முருகாற்றுப்படை, 1) மிகக் குட்டையான அளவுடைய ர்ேகள் அவனது நினைவின் வேகத்தைக் காட்டி நிற்கின்றன. ஒலியே பொருளை விளக்குகிறது. இ. —14 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/228&oldid=751044" இலிருந்து மீள்விக்கப்பட்டது