பக்கம்:இலக்கியக் கலை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் பொருளும் 217 செல்வநிலை விளங்கும். செல்வம் படைத்த மக்கள் எங்ங்ணம். வாழ்ந்தார்கள் என்பது அடுத்துத் தோன்றும் வினாவாகும். பல பாடங்களால் அவர்களைப்பற்றிப் பின்னர்க் கூறப்போகும் ஆசிரியர் முன்னுரையாக இங்கும் கூறுகிறார். மக்களைக் குறிக்கும் நேரடியான சொல் ஒன்றுகூடப் பாடலில் இல்லை. என்றாலும் உண்மை விளக்கப்படுகிறது. "தார்" என்ற சொல்லுக்கு மாலை என்பது பொருள். செடிகளில் இருக்கும் பூக்களில் வண்டுகள் தேன் கருதி மொய்ப்பது உண்டு. ஆனால் கவிஞன் வேண்டு மென்றே, "தாரிடை உறங்கும் வண்டு" என்று கூறுகிறான்.' வண்டுகள் மலரில் மொய்ப்பதற்கு இரண்டு இயல்புகள் வேண்டும். முதலாவது மலர்களில் தேன் இருக்க வேண்டும்; இரண்டாவது அம் மலர்கள் அசையாது இருக்க வேண்டும். எனவே கோசல. நாட்டவர் மாலைகளில் வண்டுகள் உறங்குகின்றன என்றால் இவ்விரண்டு இயல்புகளும் ஆண்டு இருத்தல் வேண்டும். மலர்களில் எப்பொழுது தேன் இருக்கும்? அன்றவர்ந்த மலர்களில் தேன் இருக்கும். அதுவும் அவை முகைப்பருவம் கடப்பதற்கு முன்னர்ப் பறிக்கப்பட்டிருத்தல் வேண்டும். இன்றேல் செடியில் மலர்ந்த வுடனேயே வண்டுகள் தேனை உண்டு சென்றுவிடும். இக்காரண்ங் களால் அன்றலர்ந்து மலர்ந்த மலர்களையே மாலையாகக் கட்டி அன்னிந்தனர் என அறிகிறோம். ஒருநாள் கால்ையில் பறித்து மறுநாளெல்லாம், ஆமையைவிட மெதுவாகச் செல்லும் புகை வண்டியில் சவாரி செய்து, மூன்றாம் நாள் மாலையில் மாலை யாகக் கட்டப்படும் மாலையை விரும்பி அணிகிற நாம் இதன் அருமையை அறிய இயலாது. பழந்தமிழன் மலரைப்பற்றிக் குறிப் பிடுகையில்ெல்லாம் 'நாள்மலர்' என்றே கூறும் வழக்கம், அன்றல்ர்ந்த மல்ரையே விரும்பும் அவனது இயல்பை வெளியிடு கிறது. இவ்வடியால் கோசல் மக்களின் முருகியல் சுவையை ஆசிரியர் கூறுகிறார். ஓயாது பணம் திரட்டலே வாழ்க்கையின் குறிக்கேர்ள் என்று நினைக்கும் மனிதனுக்கு மலர்மாலை, அதிலும் அன்றலர்ந்த மலர்மாலை பிடிக்குமா? மாலையணிந்து மகிழ்ச்சியடைய மனம் நேரம் ஏது அவனுக்கு: கோசல நாட்டவர் இவ்வாறில்லை என அறிகிறோம். இம்மட்டோ? மாலையை அணிந்துகொண்டு என்ன செய்தனர் அவர்கள்? உணவுண்ணக்கூட நேரமில்லாது, தம் குழந்தைகளைக் கூட எடுத்துக் கொஞ்சி விளையாடப் பொழுதில்லாது புறத்தே திரியும் நம் காலத்துச் செல்வர்கள் போலக் கோசல நிர்ட்டார் இல்லை என அறிகிறோம், எங்ங்னம் எனில், முற்கூறிய விண்டின் இரண்டாவது இயல்பால், மாலைகளில் வண்டுகள் மொய்க்கலாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/236&oldid=751053" இலிருந்து மீள்விக்கப்பட்டது