பக்கம்:இலக்கியக் கலை.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248. இலக்கியக் கலை ஆனால், அம்மாலையை அணிந்தவன் நிற்க நேரமின்றி அலைந்து கொண்டிருந்தால் - வண்டுகள் அவன் மாலையில் இருக்கவே இயலாது. ஒருவேளை ஒட்டிக் கொண்டாவது இருக்கலா: மென்றாலும் உறங்கவே இயலாது. ஆதலால் ஆசிரியர் மாலைகளில் வண்டுகள் உறங்குகின்றன என்று கூறினதை வைத்துக் காண்ப்ோமானால் மாலையை அணிந்தவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து - இன்பமாகக் காலங் கழித்தனர் என்றே நினைக்க வேண்டியது. ஆனால் இங்ஙனம் ஓரிடத்தில் அமர்ந்து இருத்தல் சோம்பேறிகளும் செய்யக்கூடிய செயலே என்று நினைப்போ மானால் ஆசிரியர் அன்று என்று கூறுகிறார். சோம்பேறிகள் உள்ள நாட்டில் நிறைந்த விளைச்சலும் போரும் பொழிலும் இதுவரை கூறிய முறையே"கவிதையிற் சிறந்தவன். கம்பன்" என்பதற்குப் போதிய சான்றாகும். ஆனாலும் இம்மட்டிோடு நிறுத்தி இருப்பின், அவன் கவிஞனாக ஆகலாமே தவிரக் கவிச்சக்கரவர்த்தியாக ஆக இயலாது. எனவே தனக்கே உரிய முறையில்மேலும் சொல்ல முற்படுகின்றான். இதுவரை கூறியதில் நாட்டுவளம்,நீங்க, மீத்ம் உள்ளது. மக்களது புறவளம்ேபாகும்: ஆனால் அவர்களது அகவளத்தைக் கூறாது விட்டால் இவ்வளவு கூறியும் பயனின்றாய் முடியும்ே கோசல நாட்டவர் செல்வர்கள் என அறிகிறோம். மேலும். பின்னர் 'வண்மை இல்லையோர் வறுமை, இன்மையால்" என்று கூறுமுகத்தாலும் இதனை வலியுறுத்துகிறான். புறத்தால் வறுமை இன்றெனினும் அக்த்தால் வறு ைம யு ைட்ய மாந்தர் எத்தன்ைபேர்! "வறுமை என்ற சொல்லுக்கே "போகத் துய்க்கப்பெற்றத்' பற்றுள்ளம்" என்று உரை எழுதினர்ர் பேராசிரியர். மேலே கூறிய செல்வம் படைத்தும் மனத்தில் அவர் அபங்கர்ம்ல் நம் நாட்டுச் ச்கோதரர்கள் சிலர் போலிருப்பின் அதனைச் செம்மையான வாழ்க்கை என்று கூறவிய்லர்தன்றே: செல்வம் என்பது சிந்தையின் நிறைவு என்றார். குமரகுருபர் அடிகளார். இம்முறையில் நோக்கினால் கோசல நாட்டிஆர் .அகச்செல்வம் படைத்திருந்தார்களா என்ற வினாத் தோன்றுமன்றே அதற்கும் கவிஞன் விடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/237&oldid=751054" இலிருந்து மீள்விக்கப்பட்டது