பக்கம்:இலக்கியக் கலை.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

艺24 இலக்கியக் க ைல் உவமிக்கிறார் கோல்ரிட்ஜ், இதனால் முன்னதன் பெருமையை அறியாதது. மட்டுமன்று; அதை எளிமையானதாகவும் ஆக்கி விடுகிறார். மேலும், அதனை வெறுக்கவும் முற்படுகிறார். பொருளும் நமது விருப்பமும் - - இத்தகைய தவற்றை நாம் செய்யலாகாது. நமக்கு வெறுப்பைத் தரக்கூடிய விஷயத்தைப் பற்றியே கவிதை இருக்கலாம். ஆனால் அதற்காக அதனை அநுபவிக்காமல் இருந்துவிடுதல் தவறாகும். மில்டன் இயற்றிய சுவர்க்க நீக்கம் என்ற நூலை எந்தக் கத்தோலிக்கக் கிறிஸ்தவராவது வெறுத்து ஒதுக்குகிறதுண்டா? அதனால் அதில் கூறப்பட்ட விஷயம் அவர்களுக்கு உடன்பாடு என்று கூறிவிட முடியுமா? நமது விருப்பு வெறுப்புக்கும் கவிதைக்கும் சம்பந்தம் இருத்தல் கூடாது. அவ்வாறு ஏற்றுவதானால் எந்த ஒரு கவிதையையும் யாரும் சிறந்தது என்று கூற முடியாது போய்விடும். தாழ்ந்த பொருள்பற்றி உயர்ந்த கவிதை மேலும் ஒன்று நோக்கற்குரியது. கலைக்குரிய பொருள் எது என்பதைப்பற்றித் தி ட் - மா. க ஒன்றும் கூறமுடியாது. அதேபோலச் சிறந்த கலை தோன்றுதற்கு இப்பொருள் தகுதியானது அன்று என்று ஒன்றையும் ஒதுக்கவும் முடியாது. கலையெல்லாம் அழகை அடிப்படையாகக் கொண்டு தோன்று வதுதானே? அப்படி இருக்கப் பொருள்களையெல்லாம், அழகுடையவை என்றும் அழகில்லாதவை என்றும் பிரித்து விட்டால், முன்னது கலைக்குரியது என்று கூறிவிடலாமே? என்று கேட்கலாம். இதுவும் தவறே. ஒன்றை அழகுடைய தென்றும் அழகற்றதென்றும் முடிவு செய்பவர் யார்? கலைஞன் தானே இதனைச் செய்ய முடியும்? கவிதைக் கலையை எடுத்துக்கொள்வோம். குண்டுசி அழகற்றதாக நமக்குக் காணப்படலாம். குமரிமுனைக் காட்சி இன்பம் நல்குவதாக நமக்குத் தோன்றலாம். ஆனால் ஒரு கவிஞன் குண்டுசியைத் தனது கவிதைக்கு ஆதாரமாகக் கொண்டதால் மட்டும் அவன் கவிதை சிறந்ததன்ற் என்று கூறிவிடலாமா? குண்டுசியைப் பற்றி அவன் என்ன கூறுகிறான் என்றல்லவோ முதலில் காணவேண்டும்? உருவத்தால் சிறியதாயினும், ஆழமாகக் குத்தக்கூடிய் அதன் தன்மையும், தலையில் பாகை சுற்றியது போன்றுள்ள அதன் கொண்டையும், பெரிய இரும்புப் பாளங்களிலிருந்து இச் சிறிய, வுடிதம் தோன்றும் வியத்தகு நிலையும் கருமை நிறமுடையதாய்ச் சரக்கிலிருந்து வெள்ளிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/243&oldid=751061" இலிருந்து மீள்விக்கப்பட்டது