பக்கம்:இலக்கியக் கலை.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குண்டுசியும் குமரி முனையும் 225 இப்பொருள் தோன்றும், விந்தையும், அது பயன்படும் சிறந்த முறையும்பற்றி அவன் விரிக்கலாம். குண்டுசிபோன்று வடிவால் சிறியவர்களாக இருக்கும் மனிதர் பலர் வேறுபட்ட பல கருத்து டைய கடிதங்களை அக்குண்டுசி ஒன்றாக இணைத்து வைத் திருப்பது போலப் பல கருத்துடைய மனிதர்களைத் தங்கள் வன்மையால் ஒன்றாக இணைத்து வைத்திருப்பர். இத்தகைய ஒர் வியக்கத்தக்க நிலையைகூட அக்கவிஞன் வருணிக்கலாம். எனவே குண்டுசியைப் பற்றி எழுதினான் என்றவுடன் அக்கவிதை சிறக்காது என்று ஒதுக்கிவிட முடியுமா? . - • . . குமரிமுனைக் காட்சியை வருணிக்கப் புகுந்த ஒருவன் வெறும் சொல்லடுக்கால், அதனை வருணித்துவிட்டு. இரும்போடு கலந்த மணலும், சங்கும் நிறைய அங்கு அகப்படுகின்றன என்று மட்டும் கூறிவிட்டால் அதைச் சிறந்த கவிதை என்று எடுத்துக்கொள்ள முடியுமா? கவிதைக்குரிய பொருளாக எது வேண்டுமாயினும் அமையலாம். ஆனால் அப்பொருளைக்கொண்டு, கவிதை ஆக்கப் பெற்று இருக்கிறதா, அன்றிச் செய்யுள் செய்யப்பெற்றிருக்கிறதா என்பதுதான் கேள்வி. கவிதைக்குத் தகுதியற்றவை என்று எளிதில் யாவரும் கூறக்கூடிய பல நீதிகளைப் புகட்டவந்த குறள், கவிதை கள் ஆக்கியுள்ளமையும், கவிதைக்கு முற்றிலும் ஏற்றது என்று கூறக்கூடிய மணிமேகலை வரலாற்றின் பல பகுதிகளைச் சாத்தனர் செய்யுளாகச் செய்திருத்தலும் கண்கூடு. எந்தப் பொருளை ஒடுத்துக்கொண்டாலும் அதனை அநுபவமாக மாற்றிக் கவிதை யைப் படிப்புவரும் தாம்பெற்ற அநுபவத்தை மீட்டும் பெறுமாறு. செய்வதே கவிஞன் வேலை. கரடி அழகுடைய விலங்கன்று. ஆனால் அகநானூற்றில் கவிதையில் வரும் கரடிகள் அழகுடையனவாய் நம் மனத்தைவிட்டு நீங்காமல் இருக்கும் இயல்பைப் ப்ெற்றுவிடு கின்றன. எனவே, கவிஞன் கவிதையில் இடம் பெறுமுன்பே ஒடு பொருளைக் கவிதைக்குத் தகுதியுடையதென்றோ அன்று என்றோ கூறல்; இயலாது. உயர்ந்த பொருளுக்கு: உயர் த.க விதை இதுகாறும் கூறியவற்றிலிருந்து திடீரென்று ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. கவிதைப்பொருள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்; கவிதையின் சிறப்பு அதனைமட்டும் பொறுத்திருக்க வில்லை என்று கூறலாமே தவிர, கவிதையின் சிறப்புக்குக் கவிதைப் பொருள் உதவியே செய்வதில்லை என்று நினைத்துவிடக் கூடாது. கவிதையின் சிறப்புக்குப் பொருளும் ஓரளவு உதவி செய்கிறது. இ:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/244&oldid=751062" இலிருந்து மீள்விக்கப்பட்டது