பக்கம்:இலக்கியக் கலை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம்: அறிமுகம் 9 திறனாய்வாளன் யார்? இலக்கியமும் திறனாய்வும் t இலக்கியம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானதாகும், அதன் திறனாய்வு! யார் ஒருவன் ஒரு பாடலையோ அன்றி ஒர் உரைநடையையோ ஆக்கியிருப்பின், அதனைக்கற்ற ஒருவன் அது சிறந்தது என்றோ, மட்டமானது என்றோ கூறித்தான் இருப்பான். அவ்வாறு ஒருவன் கூறும் பொழுது திறனாய்வு அங்கே தோன்றிவிடுகிறது. ஆகவே, திறனாய்வு' என்று கூறினால் முடிவுகூறல் அல்லது மதிப்பிடல்” அதனுள் அடங்கியிருத்தல் கண்கூடு. இலக்கியத் திறனாய்வாளன் ஒர் இலக்கியத்தை நன்கு கற்றுத் தனது கூர்த்த அறிவினாலும் அக்கலையை அனுபவித்துத் தனக்குள்ள உணர்வினாலும் நன்கு ஆராய்ந்து அவ்விலக்கியத்தின் குறைவு நிறைவுகளை மதிப்பிட்டு, அது சிறந்தது, என்றோ, மட்டமானது என்றோ கூறுபவனாவான், இத் திறனாய்வு என்ற சொல் இலக்கியத்தில் பயன்படும்பொழுது குறைவு நிறைவு கூறும் நூல்களை மட்டும் குறிக்காமல் இலக்கியத் தைப் பற்றிக் கூறும் இலக்கியங்களையும் அது பற்றி வெறும் ஆராய்ச்சி செய்யும் நூல்களையும், அதன் பெருமைகளையும், உட்கொண்டு குறிக்கிறது. எனவே, திறனாய்வு செய்யும் நூலுக்கும் எதனைப்பற்றி இத் திறனாய்வு நிகழுகிறதோ, அந்த இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவென்று அறிய வேண்டும். வாழ்க்கையைப்பற்றி ஆராய்ந்து, அதன் இழந்த பண்புகளைக்கூறுவது இலக்கியம் எனப்படும். அவ்விலக்கியத்தை ஆராய்வது திறனாய்வு எனப்படும். இலக்கியத்திறனாய்வு ஒர் இலக்கியமாகலாம். ஒரு நூலைத் திறனாய்வு செய்யப்புகுந்தால் அந்நூல் அம்மூல நூலை நம்மைக் கற்கத் தூண்டவேண்டும். மூல நூலைப்பற்றி அறிய நம்மை அது தூண்டினாலும், துண்டாவிட்டாலும் நடுவு நிலை பிறழாமல் எழுதப்பட்டிருந்தால், அத் திறனாய்வாளன் கருத்தைக் கூறுகிறது. எனலfம். - . . . அரிஸ்டாட்டிலுக்கும் தெரியாது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், கவிதைவடிவிலான இலக்கியம் பற்றி ஆராய்ச்சி நடத்தியவர் அரிஸ்டர்ட்டில் (கி. மு. 384-322) எனும் கிரேக்க அறிஞராவார். அவருடைய கவிதை இயலில் (Poetics) காணப்படும் கருத்துரை ஒன்று இங்கு நினைவுகூரத் தக்கதாகும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/25&oldid=751068" இலிருந்து மீள்விக்கப்பட்டது