பக்கம்:இலக்கியக் கலை.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை உண்மை 231 ஆராய்ச்சியில் இறங்குவது தவறு. கவிதை உண்மையைக் கூறவேண்டும். ஆனால் மெய்ம்மையைக் கூறவேண்டும் என்ற கட்டுப்பாடில்லை. - - - - . . .” மெய்ம்மை உண்மை வேறுபாடு இன்று நாம் உண்மை மெய்ம்மை என்ற இரண்டையும் பொருள் வேறுபாடு அற்றுப் பயன்படுத்துகிறோம். உண்மை என்பது எது என்று கேட்டால் பல்வேறு எண்ணங்களுடைய மனிதர்கள் வாழும் இவ்வுலகில் அறுதியிட்டு விடை கூறுவது. கடினந்தான். சாதாரணமாக நாம் பேசிக்கொள்ளும் அன்றாட அநுபவத்திலிருந்தே இதனை நிலைநாட்ட இயலும். 'இது ஒரு புத்தகம்' என்று நாம் கூறுகிறோம். இவ்வாறு , கூறினவுடன் நாம் சாதாரணமாக அதனை அறிந்ததுபோல் இருந்துவிடுகிறோம். ஆனால் இதனை அறிய வேண்டுமானால் எத்தனை கேள்விகள் இதிலிருந்து தோன்றுகின்றன? இது ஒரு கண்ண்ாற்கண்டும் இதனைக் கையால் தொட்டும் இது ஒரு புத்தகம் என அறிகிறோம். எனவே இது ஒரு புத்தகமாக இருக்கும் ம்ெய்ம்மை இரண்டுவித சூழ்நிலைகளைப் பொறுத்தே உள்து. என்னைப் பொறுத்தவரை கண். பார்வையும் கையால் தொட்டு அறியும் உற்றுணர்ச்சியும் இருத்தல் வேண்டும், புத்தக்த்தைப் பொறுத்தமட்டில் காட்சிக்குப் புலப்படும் தன்மையும் தொட்டால் கைக்குப் புல்னாகும் தன்மையும் இருத்தல் வேண்டும். நான் குருடனா கவும், கையற்ற நொண்டியாகவும் இருந்தால் இது புத்தகம் என்ற ஓசை என்னைப் பொறுத்த வரை பொருளற்ற சொற் களாகவே இருந்துவிடுகின்றன. பொருளின் தன்மையை அறியும் இயல்பு என்ப்ால் இல்லை. மற்றொரு வகையாகக் கூறு, மிடத்து உண்மை என்பது பொருளுக்கும், காண்போனுக்கும் இடையே உள்ள தொடர்பைப் பொறுத்து விளங்குவதாகும். எல்ல்ா நிலைகளிலும் எல்லாருக்கும் உண்மையான ஒன்றைக் கூறுவது கடினம். நாம் அன்றாட வாழ்க்கையில் உண்மை என்று. கூறுவதெல்லாம் ஒப்பு நோக்கு உண்மையே யாம். கலையும் விஞ்ஞானமும் உண்மையை நாடிச் சிெல் கின்றன. விஞ்ஞானம் காணப்படும் மெய்ம்மைகளை எடுத்துக் கோவைப்படுத்தி ஆய்ந்து உண்மைக்குத் தொடர், புடையனவற்றை மட்டும் எடுத்துக்கொள்கிறது. விஞ்ஞானப் புதுமை ஒவ்வொன்றும் உண்மையின் அருகில் நம்மைக்கொண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/250&oldid=751069" இலிருந்து மீள்விக்கப்பட்டது