பக்கம்:இலக்கியக் கலை.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232’ இலக்கியக் கலை செல்கிறது. வேறொரு வகையாகக் கூறின் இம்மெய்ம்மை களால் நாம் விளக்கம் பெறுகிறோம். காட்சி, ஆராய்ச்சி, என்ற வழிகளில் சென்று விஞ்ஞானம் காணும் உண்ம்ைன்யத் தான் கலையும் வேறு வழியில் g; if of முற்படுகிறது, இயற்கையை மனிதன் நன்கு அறியத் துண்ை செய்கிறது. கலை. கலை, உணர்வின் மூலமாக உண்மையின் அருகே நம்மைக் கொண்டுசெல்கிறது. ... - ... . . . . . ... - . . .” - சரித்திர் ஆசிரியனும் கவிஞனும் மாறுபடுகிற இடம் இதுவேயாகும். சரித்திரம் நடந்தவற்றைக் கூறுகிறது. ஆனால் கவிதை நடந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் பொதுத்தன்மையிலிருந்து உண்மையைப் பெற வைக்கிறது, சரித்திரம் மெய்ம்மை ஒன்றையே கொண்டு அளந்துவிட, கவிதை அதிலிருந்து உண்மையைப் பெறும்ாறு செய்கிறது. 3*. ' ' ". ... ', . . . . . . ". . ." . . . . . . . . . மேலும் சரித்திரத்தில் காணப்படாத, காரண காரியத் தொடர்பு கவிதையில் இடம் பெறுகிறது. நடந்தவற்றை அப்படியே கூறும். இயல்பே சரிதத்திற்கு உண்டு. ஆனால் கவிதையில் நிகழ்ச்சி என்பது காரண காரியத் தொடர்புக்கு உட்பட்டே நடைபெறவேண்டும். அதிலும் நாடகக்கவிதைக்கு இந்தக் கட்டுப்பாடு மிகமிக இன்றியமையாதது. வாழ்க்கையில், நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இத்தனை காரணம் கற்பிக்க இயலாது. ஆனால் கவிதையில், அதிலும் நாடகக் கவிதையில் நிகழும் நிகழ்ச்சிகளுக்குக் கவிஞன் காரணம் காட்டியே செல்லவேண்டும். அவ்வாறு அவன் காட்டும். காரணங்கள். நம்மால் தினசரி வாழ்க்கையில் காண இயலாதன வாகவும் இருக்கலாம். தினசரி வாழ்க்கையில் நிகழும் சம்பலங்களையே கொண்டு நாடகம் இயற்றப்படுவதில்லை. செயற்கரிய் செய்தவர்களே நாடகத்திற்கும் காப்பியத்திற்கும் தலைவர் களர்க, ஆகிறார்கள். எனவே அவர்கள் வாழ்க்கையில் எற்படும் நிகழ்ச்சிகளுக்குரிய காரணமும் நம்போன்ற சாதாரண் மக்களின் தினசரி வாழ்க்கையில் நிகழாதனவாக இருக்கும் என்பதில் ஐயம் என்ன? நிகழக்கூயடிவை இத்தகைய செயல் வாழ்க்கையில் நிகழக்கூடியதா அல்லவா என்பதுை. எவ்வாறு . அறிவது?, பலருடைய, அநய தேட்டு, அவற்றில் இது நிகழவில்லை யாதலின் ற்வதும் உண்மைக்கு விரோதமானது என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/251&oldid=751070" இலிருந்து மீள்விக்கப்பட்டது