பக்கம்:இலக்கியக் கலை.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234. இலக்கியக் கலை இறந்ததற்கே வருந்தினாள். "காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என் கணவன்? என்று கேட்டாள். வாழ்க் கை யி லும் அநுபவத்திலும் நடைபெறக் கூடியதன்று இது என்று இதனை ஒதுக்கிவிட முடியுமா? "உலகியலில் இது முடியாததாக இருக்கலாம். ஆனர்ல் உண்மை உடையதாகும் இச்செயல். 'நம்பவியலாத"நடந்தவற்றைப் பற்றிக் கவிதை புனைவதைக் காட்டிலும் உலகியலில் முடியாத நடைபெறக் கூடியவற்றைப் பற்றிக் கவிதை புனைவது சிறந்தது' என்றே அரிஸ் டாடிலும் கூறினார். . . . . . இதுவே கவிதையில் உண்மை எனப்படுவது. அது நமது அநுபவத்திற்கு ஒத்துவரவில்லை என்பதனால் அதனைப் புறக்க்ணித்துவிடக்கூடாது. இக்காலத்தில், சிறப்பாக நமது நாட்டில் இக்கூக்குரல் பெரிதாகக் கிளம்பியிருக்கிறது. கவிதையா? அது வெறும் பொய்யும் கற்ப்னையும் கலந்ததாயிற்றே! அது நமக்கு வேண்டாம் என்று கூறும் காலம் இது. கம்பராமாயணமா? முற்றும் கவிஞனின் சார்மற்ற கட்டுக்கள். நடக்க இயலாதன. வாழ்க்கையோடு ஒவ்வாதவற்றைக் கவிஞன் பாடியிருக்கிறான். எனவே அது புறக்கணிக்கப்படவேண்டியது என்ற கூச்சில் மிகுதியான இக்காலத்தில் அரிஸ்டாடில் என்ற பெரியார், கவிதைக் கலைக்கு ஆதி இலக்கணம் வகுத்த கிரேக்கத் தொல்காப்பியனார் கூறுவதைக் கேட்டல்வேண்டும் : 'கவிதையின் பட்ைப்புக்கள் மெய்ம்மையானவை அல்ல; ஆனால் உயர்ந்த உண்ம்ைத் தத்துவம் அமைந்தவை, எப்படி இருக்கவேண்டுமோ அவைகளேயன்றி எப்படி உள்ளனவோ அவையல்ல." •: கவிதையில் உண்மை இதிலிருந்து நாம் அறியவேண்டுவது ஒன்று உள்ளது. (ஒரு கவிஞன் தன் காப்பியத்திற்கோ அல்லது நாடகத்திற்கோ வேண்டும் மூலப்பொருளை, உலகில் நடந்த ஒருநிகழ்ச்சியிலிருந்து எடுத்துக்கொண்டிருக்கல்ாம். அந்த அளவில் அது நிகழ்ச்சிப் பொருள்தான். ஆனால், அவன் கவிதையாக அதைப் புனையும் பொழுது அங்கு நிகழ்ச்சிப் பொருள் மட்டும் இல்லை. அதனைக் கடந்து நிற்கும் உண்மைப்பொருள் விளங்கக் காண்கிறோம். அவ்வுண்மைப் பொருள் நிகழ்ச்சியில் வருவதும் இல்லை: அநுபவித்தில் சிக்குவதும் இல்லை; உலகியலில் நடைபெறுவதும் இல்லை. சரித்திரம் நிகழ்ந்ததைக் கூறுகிறது. ஆனால் கவிதை இருந்திருக்கவேண்டுமோ அதனைக் கூறுகிறது. இருந்திருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/253&oldid=751072" இலிருந்து மீள்விக்கப்பட்டது