பக்கம்:இலக்கியக் கலை.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை உண்மை 235 வேண்டியதைக் கூறுவதால் கவிதையில் உண்மை இல்லை என்று கூறுவது எவ்வளவு பெருந்தவறு? சிலப்பதிகாரம் கோவலன் கதையைமட்டும் கூறவந்த நூல் என்று கூறமுடியுமா? அந்நூல் அவன் கதையையும் கூறிற்று. பின்னர் அதன்ைவிட மிக முக்கியமான ஒன்றையும் கூறிச் சென்றது. மூன்று பேருண்மை களை அது கூறவில்லையா? அறநெறி பிழைத்தோர்க்கு அறங்கூற்று' என்பதும், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதும் மறவாது இருந்திருக்கவேண்டிய உண் ைம க ள். ஆனால் இரண்டும் மறக்கப்பட்ட கதைதான் சிலப்பதிகாரம். என்ன இருந்திருக்க வேண்டும் என்பதையே கவிதை குறிக்கிறது. கோசல நாட்டைக் கூறுகிறான் கவிஞன். 'எல்லாரும் எல்லாப்பெருஞ் செல்வமும் எய்தலாலே, இல்லாருமில்லை உடையார்களும் இல்லை மாதோ' என்று கூறினானே இது மெய்ம்மைப் பெயருளா? இல்லை. என்ன இருந்திருக்க வேண்டும் என்று கவிஞன் நினைத்தானோ அந்த நினைவேயாகும் இந்தக் கவிதை. மெய்ம்மை அல்ல என்றதால் இவற்றை உண்மையுமல்ல. என்பார் கவிதைக் கலையையும் அறியாதவரே யாவார். * ... . . . . கவிதையும் மெய்ம்மையும் உண்மை கூறும் கடப்பாடு உடையது கவிதை என்றமையின். வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் மெய்ம்மைகளையும் கூறுவதற்குக் கவிதை தகுதியற்றது போலும் என்று யாரும் நின்ைத்துவிட, வேண்டாம். வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றையும், சரித சம்பந்த மானவற்றையும் கொண்டுகூடக் கவிதை தோன்றலாம். ஆன்ால் வாழ்க்கையில் நிகழும் எல்லா நிகழ்ச்சிகளும் கவிதைக்கு ஏற்றவையல்ல என்பது திறனாய்வாளர் கருத்தாகும். பல நிகழ்ச்சிகள் கவிதையாக்கப்படுதற்குரிய இயல்புகள் தம்முள்ளே அமையப்பெற்று இருக்கும். அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில்கூடக் கலந்திருக்கும் பல வேண்டாதவற்றை நீக்கிக் கவிஞன், தனக்கு வேண்டிய நிகழ்ச்சிகளை மட்டும் எடுத்துக்கொண்டு கவிதை புனைய வேண்டும். ஆனால் அவற்றை எடுத்து அப்படியே கவிஞன் கூறுவானேயாகில் அது வெறும் சரித்திரம்ாகவே முடிந்துவிடும். கவிதையாக அதனை மாற்றுவதற்குக் கலைஞன் பெருமுயற்சி செய்யவேண்டும். இந்த நிகழ்ச்சிப் பொருளைத் தன் கற்பனை என்னும் "உலையில் ப்ெய்து, கவிதை என்னும் நீர்விட்டுக் கலந்து, சமைத்துத் தருகையில்தான் அது முடிவுபெற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/254&oldid=751073" இலிருந்து மீள்விக்கப்பட்டது