பக்கம்:இலக்கியக் கலை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் : அறிமுகம் {{ 'காம்பொசிஷன் எனும் சொல்லாலும் சுட்டினர் என்பதை அறிகிறோம். எனவே, தொல்காப்பியனார் போற்றும் செய்யுள்' எனும் இலக்கியப்பெயரும் ஷேக்ஸ்பியர் காலத்துப் பெருவழக்கில் இருந்த காம்பொசிஷன் (Composition) எனும் இலக்கியப் பெயரும், ஏறக்குறைய ஒத்த பொருள் பயக்கும் சொற்களாக உள்ளமை இங்குக் கருதத்தக்கது. லிட்டரேச்சர் எனும் சொல்லாட்சி ஆங்கிலத்தில், இலக்கியம்’ எனும் பொருள்பயக்கும் (Literature) எனும் சொல் கி. பி. ஆயிரத்து எண்ணுற்றுப் பன்னிரண்டில் (1812) தான் வழக்கிற்கு வந்ததாக ஆக்ஸ்பேர்ர்டு ஆங்கில அகராதி அறிவிக்கிறது.' படைப்பாளிகளே படிப்பாளிகள் மனித இன நாகரிக வளர்ச்சியில் சிறந்த பழம்பெரும் நாகரிக நாடுகள் அனைத்திலும் கவிதைகளே, தொடர்ந்து நெடுங்காலம் படைக்கப்பட்டு வந்தமையால் அவற்றையே, இலக்கியமாகக் கருதும் எண்ணப்போக்கு உருவாகியுள்ளதை அறிய முடிகிறது. இதனால்தான். பா, பாட்டு. செய்யுள் எனும் சொற்களைக் கொண்டே, மஞ்சள் ஆறு முதல் தேம்ஸ் நதி வரையில் இலக்கியத்தைச் சுட்டியுள்ளனர். பாவினைப் படைப்பவன் பாவலன்; கவிதையைப் படைப்பவன் கவிஞன் எனும் வழக்கு உண்டாயிற்று. சங்ககாலத்தின் கடைப்பகுதியில் இயற்றப்பட்ட பரிபாடலில், கவிதை' என்னும் சொல்லாட்சியைக் காணு கிறோம். ஆனால் கவிஞன் எனும் சொல்லாட்சியைக் கர்னோம். - -- - - - - - இக்காலத்தைப் போன்று அல்லர்மல், பண்டைக் காலத்தில் படைப்பாளிகளாக (Creative writers) விளங்கியவர்கள் எல்லாம், படிப்பாளிகளாக (Scholars)வும் இருந்தமையால், புலவர்கள் (புலம்-அறிவு), அறிவர் (அறிஞர்), ஷெங்-சங் (Sheng - Ching) ஞானி (Seers) எனப் பலவாறாக உலகின் பல பகுதிகளில் போற்றப்பட்டுள்ளனர். . . . . . இவற்றால், இலக்கியம்’ எனும் சொல்லின் பொருள் மிகவும் பரந்ததாகவும், நெகிழ்ச்சி உடையதாகவும், எளிதில் வரையறுத்துக் கூற இயலாததாகவும், உள்ளமை இலக்கியத் திறனாய்வில் உண்டாகும் இடர்ப்பாடு என்பது தெளிவாகிறது. ஆயினும், இலக்கியத்தைப் பற்றிய மேற்கண்ட ஆய்விலிருந்து, அதைப்பற்றி முழுமையான எண்ணப்போக்கு உருவாகி உள்ளதை, நாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/27&oldid=751090" இலிருந்து மீள்விக்கப்பட்டது