பக்கம்:இலக்கியக் கலை.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையின் கதை 25 s அப் பரத்தையிடம் நட்புக் கொண்டுவிட்டான். பிறகு சில காலங் கழித்துத் தன் வீட்டை நினைந்து திரும்பவேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் பரத்தையர் அவனை விட்ட பாடில்லை. மேலும் வீட்டிற்கு வந்தால் தலைவிக்ட: அவனை ' வீட்டிற்குள்விட மறுக்கிறாள். இதனால் sømtrrrrr அனைவரும் இவன் செய்கையை அறியும்படி ஆகிவிட்டது, என்ற இக்கருத்து இப் பாடலில் உலமை மூலம் கூறப்படுகிறது. அதாவது தூண்டிலில் கோத்த இரை. தலைவனைப் பரத்தையிடம் போகுமாறு கூறிய பாணனுடைய வார்த்தைகளின் இனிமைக்கு உவமை. வாளைமீன் அவ் விரையைக் கவர்ந்தது. தலைவன் பரத்தையிடம் வாழ்ந் தன்மக்கு உவமை. தூண்டில் பிடிப்பு மீனை விடாமல் இருந்தமை, தலைவனைப் பரத்தையரும் அவளுடைய தாய் மாரும் விடாமையாகும். மீன் குவளைமலரை ஒடித்து, வள்ளைக்கொடியை மயக்கினமை, தலைவன் தலைவியின் மனம் வ்ருந்தும்படி செய்தமையும். அவளைச் சுற்றி வாழும் சுற்ற்த்தார் எல்லாம் வருந்தும்படி செய்தமையுமாம், பகலில் மீன் குளத்தை அலைக்கழித்தமை, தலைவன் பகலில் ஊராரெல்லாம் அறியும்படி மன்னிப்பு வேண்டித் த்லைவியிடம் அலைவதற்கு உவமை. ". . " ." : له ”: , リ。。。 "。 இங்ங்ணம் ஒரு பொருளை வரிசைப்படுத்திக் கூறு முகமாகவே சிறந்த உட்பொருள் ஒன்றை உள்ளே வைத்துக் கவிதை புனையும் ஆற்றல். தமிழ்ப் புலவர். இனத்திற்கே பொருந்துவதாகும். - - அணிகள் பலவற்றுள்ளும் எளிமையானது உவமையணியே ஆகும்.தான் கூறவந்த ஒன்றிற்கு விளக்கம் தரல்வேண்டிங்க அப்பொருளினிடத்து உள்ளே அமைந்துகிடக்கும் ஓர் இயல் பையோ, பல இயல்புகளையோ எடுத்துக்காட்ட வேண்டிங்iம் கவிஞன் உவமையைக் கையாள்கிறான். - - -- - - to to: # * : 1. simile and Metâphor. 2, Genius. 3. தொல்-உவமவியல்: 4. Thè Perfect simile must both illu straté àfid enpobfé the subject," - - - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/270&oldid=751091" இலிருந்து மீள்விக்கப்பட்டது