பக்கம்:இலக்கியக் கலை.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 இலக்கியக் கலை குறிப்பது கவி மரபாகும். அதாவது 'அ' என்ற பொருளைக் குறிக்கவேண்டிய இடத்து 'ஆ' என்ற பொருளைக் கூறுவது கவிம்ர்பாயிற்று. உதாரணமாக வீடும் உடம்பும் ஒத்த இயல்புடையன. எனவ்ே உடம்பைக் கூறவேண்டிய விடத்து 'வீட்டைக் கூறுகிறான் கவிஞன். புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு" o - - -குறள். 904 உளக்கோயில் கொண்ட பிரான். இவ்வாறு உடல் வீடாகவும், வீடு உடலாகவும் மாறிப் பேசப்படுதலைக் காண்கிறோம். ஒன்றின் பொருட்டு வேறொன்றின் பெயர் கூ றப்படுதலைப் பழங்காலக் கவிதைகளில் மிகுதியும் காணலாம். இவற்றைக் குறியீட்டாட்சி: என்று கூறலாம். பண்புகள் பலவற்றிற்குங்கூட, நிறம், குணம் முதலியன கற்பிக்கப் பெற்றமை இது கருதியேயாகும். , , , புதிய பொருளில் பழைய சொல் இந்த நிலையிலிருந்து புதியதோர் இயல்பு தோன்றக் காண்கிறோம். இதுவும் கவிதை உலகில் தோன்றிக் கவிதைக்குச் சிறப்பு அளிப்பதோடு மொழிவளர்ச்சியையும் குறிக்கொள்கிறது. முன்னர்க் கூறிய அதே குறியீட்டை எடுத்துக் கொள்வோம். 'அ' என்ற பொருளும் 'ஆ' என்ற பொருளும் ஒன்றாய் இருத்தலைக் காண்கிறோம். இவை இரண்டிற்கும் முறையே இ' என்றும் ஈ என்றும் பெயர்கள் இருக்குமானால், "அ" என்ற பொருளைக் குறிப்பிடவேண்டிய இடத்தில் ஆ என்ற பொருளையாவது அதன் பெயராகிய 'க்' என்பதையாவது கூறலாம். ஆனால் 'அ' என்ற பொருளும் 'ஆ' என்ற பொருளும் இருந்து 'அ'வுக்குப் பெயராக இ' என்று மட்டும் இருந்து, 'ஆ' :வுக்குப் பெயரே இல்லை என்றால் என்றால் என்ன செய்வது? இப்பொழுது ஆ வுக்குப் பெயரே இல்லை என்றிால் என்ன செய்வது? இப்பொழுது ஆ வைக் குறிக்க்வேண்டிய இடத்தில் 'அதற்குரிய பெயரின்மையின் அவுக்கு உரிய பெயராகிய இ' யாலேயேதின் கூறல் வேண்டும். இப்பொழுது ஆ வைக்குறிக்க ஒரு புதுச்ச்ொல் பிற்க்கிறது. உதாரணமாகக் கண்ணுக்குத் தோன்றும் தின்கு ஒக்ாண்லின்றி இருப்பது நேர் என்று கூறப்படும். ஒரு மனிதின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/277&oldid=751098" இலிருந்து மீள்விக்கப்பட்டது