பக்கம்:இலக்கியக் கலை.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருவகத்தின் வரலாறு 259 மனத்திற் பட்டதை மாற்றிப் பொய்யாகக் கூறாமல், ஒளிக்காமல் ஒன்றைக் கூறினாலும் செய்தாலும் அவனை நேர்மையுள்ளவன் என்று கூறுகிறோம். பருப்பொருளாக உள்ளவற்றின் பெயர்கள் நுண்பொருளாக உள்ளவற்றிற்குக் கூடப் பயன்படுதலை அறிகிறோம். உளம் வேறு, சொல் வேறு படாமல் இருக்கும் ஒருவனை எச்சொல்லால் குறிப்பது? நேர்மை என்ற சொல் மேற்கூறிய பொருளில் எவ்வாறு வந்தது என்று கண்டோம். மொழிக்கு ஒரு புதிய சொல் (புதிய பொருளில் பழைய சொல்) கிடைத்துவிட்டது அறிதற்பாலது. பண்படியாகப் பிறக்கும் எல்லாச் சொற்களும் இவ்வகையைச் சேர்ந்தனவே. இவையனைத்தும் ஒருகால் ஒவ்வொரு பெயராக இருந்து பின்னரே பண்புச் சொற்களாக மாறியிருக்க வேண்டும். இவையும் கவிதையின் பொருட்டாகத் தோன்றியவையே. தீங்கரும்பு இன்சுவை' என்பவை நோக்கற்குரியன. கந்தர் அநுபூதியில் நெஞ்சக் கனகல்லும் என்று கூறும்பொழுது இவ்வுருவகம் முற்கூறிய விதத்தில் பெறப்பெற்றதை அறியலாம். சிற்சில இடங்களில் பொதுத்தன்ம்ையை விளக்க வந்த சொல்லின்றியும், பொருளே பயன்படுத்தப்பெறலாம். மணிவாசகப் பெருமான் "கல்லைப் பிசைந்து கனியாக்கி என்று கூறினமையின் உருகா நெஞ்சைக் குறிக்க ஒரு புதுச்சொல் மொழிக்குப் பெறப்படுகிறது. நெஞ்சின் இயல்பு என்பன்தி அறிந்தபிறகு, நெஞ்சென்ற சொல்லைக் கேட்டவுடன் உருக்கம் நம் மனத்தில் படிகிறது. ஆன்ால் உருக்கமாகிய இவ்வியல்பு இல்லாத நெஞ்சை என்னென்று குறிப்பது உருக்கம் சிறிதும் இல்லாத கல்லுடன் அத்தகைய நெஞ்சம் உவமிக்கப்பெற்றது. பிறகு அத்தகைய கல்லும் நெஞ்சும் வேறு பிரிக்கப்பெறாமல் உருவகிக்கப் பெறுகின்றன, இவை இரண்டின் பொதுப்பண்பு மறைந்து, இரண்டையும் ஒன்றாக நினைக்கிறோம். இதனின் அடுத்த நிலை நெஞ்சுக்குப் பதிலாகக் கல்லையே கூறிவிடும் நிலையாகும். முதலில் இவ்விரண்டும் உருகாமையாகிய, பொதுப்பண்பு காரணமாகவே சேர்த்துக் கூறப்பெற்றன. அங்ஙனம் கூறும்பொழுதுகூடக் கல்லின் ஏனைய பண்புக்ளும், ந்ெஞ்சின் ஏனைய பண்புகளும் விட்டுவிடப் பெறுகின்றன். பிறகு இவை இரண்டின் ஒத்த பண்பிற்காக இன்ற்ாகக்"கருத்ப்படுன்றன. எனவே நெஞ்சிற்குப் பதிலாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/278&oldid=751099" இலிருந்து மீள்விக்கப்பட்டது