பக்கம்:இலக்கியக் கலை.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 22 அகமும் புறமும் - இதோ அகப்பாடல் மன்றிரும் ப்ெண்னை மடல்சேர் அன்றில் நன்றுஅறை கொன்றனர் அவர் எனக் கலங்கிய என்துயர் அறிந்தனை நரறியோ எம்போல் இன்றுணைப் பிரிந்தாரை உடையையோ .ே" * ‐ - = < \ o: (நெய்தற்கலி.12. தன்லவன் தலைவியை விட்டுப் பிரிந்துபோய் விட்டான். ஒய்வும் ஒழிதலும் இல்லாமல் அவன் உறவை நினைந்து வாடுகிறாள் தலைவி. இரவில் துரக்கம் வர்வில்லை. கடலின் பக்கத்தே வீடு அவளுக்கு. அங்கு உள்ள பனைமரத்தில் ஓர் அன்றில் பறவை மிகவும் கதறுகிறது. அதனைக் கேட்ட தலைவி உடனே அன்றிலை விளித்துப் பின்வருமாறு கேட்கிறாள்; ஏ, அன்றில் பறவையே! தலைவர் வர்ாமல், எனக்குச்செய்த தீங்கை நான் நினைந்து வருந்துதலைக் கேட்டு அதனால் நீயும் வருந்திக் கத்றுகிறாயா? அல்லா விடின் உனக்கும், அன்புசெய்த தலைவன் ஒருவன் இருந்து, இப்பொழுது பிரிந்துபோய் விட்டானா?” - கவிஞன் இவ்வாறு கற்பனை செய்கிறான். அன்றில் கதறுவதற்கும். தலைவி வருந்துவதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. பெண்ணின் மனநிலையை இவ்வளவு அழகாகக் கூறும் இதனை, உண்மையாக வருந்தும் ஒரு பெண் பாடவில்லை. ஆசிரியர் நல்லந்துவன் என்ற ஆண்மகன் அல்லவா இவ்வளவு உணர்ச்சி ததும்பப் பாடுகிறான்? கதை அமைப்போ, அன்றித் தனிப்பட்ட மனிதன் வாழ்வில் நடை பெற்ற நிகழ்ச்சியோ ஒன்றும் இதற்கு மூலமாக இருக்கவில்லை. ஆனாலும் கவிதையைப் படிக்கும்போது உண்மையாக நடந்தால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட உணர்ச்சி ஏற்படுகிறது. ஒருவிதமான அடிப்படையும் இல்லாமல் எவ்வாறு ஆணர்ச்சி ஊட்டமுடியும்? ஆனால் இதோ கவிஞன் ஊட்டி இருக்கிற்ானே? எவ்வாறு 'அவன்ால்.இது முடிந்தது? இத்தகையிலகவிதைகன்ள, உணர்ச்சினி'திப்படையாகக் இத்தணிகம் கவிதைகன்ள, உணர்ச்சினி'திடிப்படையாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/281&oldid=751103" இலிருந்து மீள்விக்கப்பட்டது