பக்கம்:இலக்கியக் கலை.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகமும் புறமும் #68 கொண்ட அகப்பாடல் என்று கூறுகிறோம். இவற்றை ஆக்கும் கவிஞன் வெளி உலக அநுபவங்களில் ஆழ்ந்துவிடு வதில்லை. அதற்கு மாறாகத் தன்னுள்ளேயே தான் அமிழ்ந்து விடுகிறான். தன் புற மனத்தைக் கடந்து, அகமனத்தில் சென்று துருவிப் பார்க்கிறான். மனிதனாக உள்ளநிலையில் எண்ண உதவும் மனத்தின் ஆழத்தில் சென்று தன்னுடைய உணர்வு ஒன்றையே துணையாகக்கொண்டு உலாவுகிறான். அவ்வகமனத்தில் உண்டாகும் அநுபவங்களை மட்டும் எடுத்து இவ்வகைப் பாடல்களில் பெப்கிறான். இவற்றிற்கு மாறான “புறப்பாடல்களில் கவிஞன் அநுபவத்திற்கு, அகமனத்தை நாடிச் செல்வதில்லை. புற உலகில் நுழைந்து அங்கு நடை பெறும் நிகழ்ச்சிகளில் அமிழ்ந்து அவற்றைப்பற்றி மட்டும் கூறுகிறான். இவ்விருவகைப் பாடல்களுக்கும், தெள்ளத் தெளிய அறுதியிட்டு வேறுபாடு காட்ட இயலாதேனும் ஒரளவு வேற்றுமை காண முடியும் மேலும் இங்கு அகம், புறம் என்று கண்டிருக்கும் பெயர்கள் அடிக்குறிப்பில் தரப் பட்டிருக்கும் ஆங்கிலப்பெயர்களுடன் முற்றும் பொருந்துவன அல்ல. பெரும்பான்மை இவை ஒத்த இயல்புடையனவாயினும், அந்த ஆங்கிலப் பகுப்புக்குள்ள அனைத்துப் பொருளையும் தமிழ்மொழிக்கு ஏற்றினால், அது சால்ாது என்பதை நினைவில் இருத்தல் வேண்டும். அநுபவ வ்கை முதலாவதாக அகமென்னும் பிரிவைக் காண்ப்ோம். ஒர் உதாரணம் மேல்ே காட்டப்பெற்றுள்ளது. அதன்ை நாதநாமக்கிரியை அல்லது சாவேரி இராகத்தில் படித்துப் பார்த்தால் நன்கு அநுபவிக்க முடியும். இது க்ருதியே இந்தித் தொகுப்பை இசைப்பாடல் என்றும் சொல்வதுண்டு. ஏனைய பாடல்களும் இசையில் பயின்று வருமேனும் இவ்வகைப் பாடல்க்ட்கு இசை மிக இன்றியமையாதது. இவ்வகைப் பாடல்கள் ஒருவனுடைய மிகக் குறுகியதான சொந்த அநுபவம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்டும் தோன்றலாம், மிகப்பரந்தும். விரிந்தும். ஒரு சமுதாயம் அல்ல்து இனம் முழுவதும் அநுபவிக்கும் அநுபவத்தை அடிப்படையாகக் கெர்ண்டும் தோன்றலாம். ' அகப்பர்டலின் அடிப்படை தனி மனிதனின் அநுபவமாயினும், சிறந்தவை என்று கருதப் பெறும் அகப்பாடல் அனைத்தும் தனி மனிதனுடைய அநுபவங்கட்கு மட்டும் வடிவு கொடுக்காமல் உலகில் உள்ள மக்கள் அனைவ்ருடைய அநுபவங்கட்கும் வடிவு கொடுப்பன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/282&oldid=751104" இலிருந்து மீள்விக்கப்பட்டது