பக்கம்:இலக்கியக் கலை.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264. இலக்கியக்கலை போல் அமைந்துள்ளன.” என்று பேராசிரியர் ஹட்சன் கூறிய இக்கருத்துத் தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தவரை முற்றிலும் உண்மை. இது உண்மையாக இருத்தலினாற்றான். நாம் இரண்டாயிரம் ஆண்டுகட்குப் பிறகு இன்னும் அகநானூறு போன்ற நூல்களை அநுபவிக்க முடிகிறது. wo ഥേയ്ക്കു காட்டிய பாடல் தனிப்பட்ட தலைவி ஒருத்திக்கு ஏற்படும் அநுபவமாகும். பெண் இனம் முழுவதுக்கும் ஏற்படும் அநுபவத்தைத் தலைவி ஒருத்தி கூறுவதைக் காண்ப்ோம். தோள்கலம் உண்டு துறக்கப்பட்டோர் வேணிர் உண்ட குடையோர் அன்னர்" கூடினர் புரிந்து குனன் உனப்பட்டோர். சூடினர் இட்ட பூவோர் அன்னர்" " ' ". . ー ベ マン (பாலைக்கலி-22) கூடியிருந்த தலைவன் பிரிந்துவிட்டான். அங்ங்னம் அவனால் விட்டுச் செல்லப்பெற்றதனால் வாட்டத்தை அடைந்த தலைவிக்கு உவமை எவை எவை தெரியுமா? பனைமட்டையில் கிண்ணம் செய்து பதநீர் வாங்கிக் குடித்து விட்டுக் கீழே எறிந்துவிடுகிறார் களே. அந்தப் பனங்குடையும், மாலையில் தலையில் வைத்திருந்த பூவைக் காலையில் எறிந்து விடுகிறார்களே, அப்பூவும் உவமை யாயின. இங்ங்னம் தலைவனால், துறக்கப்பெற்ற பெண் யாராயினும் அவர் அனைவருக்கும் இவ்வநுபவம், உண்டாவது உண்மைதானே? எத்தேசத்திலும், எக்காலத்திலும் இவ்வநுபவம் யாருக்கும்.பொய் ஆவதில்லை அல்லவா? இன்று வாழும் நம்மில் பலருக்கு அடிக்கடி மனத்துள் ஒரு போராட்டம் நடைபெறு கிறது. அத்தகைய சந்தர்ப்பங்களின் போதெல்லாம் கடமை ஒருபுறமும் அன்பு ஒருபுறமும் நின்று போரிடுதலைக் காண்கிறோம். தமிழ்நாட்டிவுர்க்கு மட்டும் உரிய அநுபவம் அன்று இது. உலகம் முழுதும் உள்ள அறிவுடைப் பெருமக்கள் மனத்தில் நடைபெறும் இப்போராட்டத்திற்கு ஒரு கவிஞன் வடிவு தருகிறான், ஒரு தலைவன் .பொருள் தேடிச் சென்றுவிட்டான், இடைவழியில் அவுன் அன்பு, வீட்டிற்குச் செல்லுமாறு அவனைத் தூண்டுகிறது. ஆனால் அவனுடைய அறிவு, கடமையை முடித்துவிட்டுத்தான் விடு.இரும்பவேண்டும் என முன்செல்லத் தூண்டுகிறது. தலைவன் இவ்விரண்டின் இடைப்பட்டு இரண்டு யானைகளால், எதிர் எதிர்ப்புறமாக இழுக்கப்படும் கயிறுபோல,அவதிப்படுகிறான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/283&oldid=751105" இலிருந்து மீள்விக்கப்பட்டது