பக்கம்:இலக்கியக் கலை.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகமும் புற்மும் 267 அநுபவமும், சில நிமிடங்களுக்கு மேல் நிற்றல் இயலாதன்றோ? இதனாலேயே அகப்பாடல்கள் அனைத்தும் குறுகிய அளவுடையன வாகக் காணப்படுகின்றன. உணர்ச்சி என்பது ஆற்றொழுக்குப் போல் இருந்துகொண்டிருப்பதாகும். ஒ டு கி ன் ஆற்று வெள்ளத்தைக் குறுக்கே தடைசெய்தால் திடீரென்று தண்ணீரின் அளவு மிகுந்து அணை எவ்வளவு உயரம் இருக்கின்றதேர். அந்த உயரத்தை அடைகிறது. அணை எடுபட்டவுடன் குறைந்து விடுகிறது. கவிதை, உணர்ச்சி ஊட்டுவதும் இவ்வகையில்தான். ஆனால் மனத்தில் தோன்றும் எந்த உணர்ச்சியானாலும் சில நிமிடங்களுக்குமேல் நிற்பதில்லை, மிகவும் வருத்தத்தைத் தரும் இழவை அநுபவிப்பவர்களுங்கூட சில வினாடிகட்குப் பிறகு அந்த ஆழமான உணர்ச்சியைப் பெறுவதில்லை. ஆழமான எந்த உணர்ச்சியும் இந்த அளவுக்கு மேற்பட்டு மனத்தில் தங்கினால் மனிதனுக்குத் தீமையையே உண்டாக்கும். எனவே ஆழ்ந்த உணர்ச்சிகளைத் தரும் அகப்பாடல்களும் குறுகிய அளவுடன் நின்றுவிட்டன. மேலும் இவ்வகைப்பாடல்களில், எந்தப் பாடலை எடுத்துக் கொண்டாலும், கூறவந்த ஒரு கருத்து அல்லது உணர்ச்சிக்கு அரண்செய்யும் முறையில் ஏனைய கருத்துக்களும், ஏன்? வருணனைகளுங்கூட அமைந்திருக்கக் காண்கிறோம். அப் பாடலில் உள்ள ஒவ்வொரு சொல்லும் அம்முதற் கருத்துக்கு உதவும் முறையில் அமைந்திருக்கும். மற்றொன்று வித்தல் கூடாது ஆகலாலும், இப்பாடல்கள் அளவாற் சுருங்கியுள்ளன. இக்கருத்து, எட்டுத்தொகையுள் உள்ள அகத்திணை நூல்கள் அனைத்திற்கும் பொருந்தும், மதுரைக் காஞ்சியைப்போலவும், கூத்தராற்றுப்படையைப் போலவும் நீளமாக இவை இல்லை என்பது தெளிவு. பலகோணங்களில் நின்று அநுபவித்துல் ஒரே அநுபவத்தைப் பல கவிதைக்ள்ாகப் புனையலாமேனும், ஒரே கவிதை நீளமாக இருத்தற்கில்லை. தலித்தொகை முதலிய நூல்களில் ஐந்துவகைத் திணைகட்கும் பல பல பாடல்கள் காணப்பெறுவதன் கருத்து இதுவேயாம், :பத்துப்பாட்டில், உள்ள முல்லை, குறிஞ்சிப் பாடல்கள் அகத்திணை நூல்களுள் வேக்கப்பெறாமல், பத்துப்பாட்டில் இடம் பெற்றம்ைங்க் இது கருதியே போலும். உதாரணமாகப் பாலைத்தின் என்பது பிரிதலும் பிரிதல் நிமித்தமும் காரணமாகத் தோன்றும் உணர்ச்சிகளை வெளியிடுகிறது. இவ்வதுப்iம்"ஒன்றேய்ாயினும் இதனைப் பல நிலைகளில், பல்வேறு மன்நிலையுடைய தலைவன், தலைவியர் மனநிலைகளில் நின்று கண்டு அநுபவித்துக் கவிஞன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/286&oldid=751108" இலிருந்து மீள்விக்கப்பட்டது