பக்கம்:இலக்கியக் கலை.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 இலக்கியக் கலை பல பாடல்களாக ஆக்கியுள்ளான். தனிப்பட்டவர்களின் அநுபவம் காரணமாகத் தோன் றி னும் இப்பாடல்களில் கவிஞன், தன்னையோ, அல்லது இவ்வநுபவம் பெற்றவர்களையோ, பிரித்து எடுத்துக்காட்டுவதில்லை. பொதுவாகவே பாடலை அமைத்து விடுகிறான். கவிதையை ஆக்கும் "அவன்கூட மறைவில் நின்று, அவ்வநுபவத்தை நம்முடையது போல் நாம் அநுபவிக்குமாறு ச்ெய்து விடுகிறான். கட்டுரையின் முதலில் காட்டப்பெற்ற கலிப்பாட்டை நாம் படிக்கையில் பிரிவினால் ஏற்படும் ஆறாத்துயரமும், அத்துயரம் - காரணமாகத் தொடர்பற்ற பொருள்களிடமும் பேசும் இயல்பும் நாம் அநுபவிக்கும் அநுபவமாகும். ஆனால் அதனைப் படிக்கையில் ஆசிரியர் நல்லந்துவனாரையோ, அல்லது வேறு ஒரு பெண்ணையோ நாம் நினைப்பதில்லை, அவ்வாறு தனிப்பட்ட மக்களின் நினைவு நம் மனத்தில் தோன்றுமேயாயின் சிறந்த அநுபவத்தை நாம் பெற முடியாமற் போய்விடும். பெயர் கூறா. . . . . தமிழ் இலக்கியத்தில் காணப்பெறும் அகப்பாடல்கள் முழுவதும் ஒருவர். பெயரும் குறிக்கப்பெறாமல் பாடப்பட்டிருப்பதன் கார்ண்ம் என்ன? சிறந்த இசைப்பாடல் என்று கூறக்கூடிய கலித்தொகையும் இவ்வாறே உள்ளது. அகப்பாடல் எனப்பெறும் இசைப்பாடலின் அடிப்படை முழுதும் தனிப்பட்ட்வர் தம்முள் தாமே அழுந்தி அநுபவிக்கும் அநுபவம் காரணமாகத் தோன்றினும், அநுபவிப்பவன் யார் என்ற குறிப்பைக்கூட வெளியிடுவதில்லை. மேலும் இலக்கணமாகிய தொல்காப்பியமும் இவை சுட்டி ஒருவர் பெயர். கொளப் பெறா என்று கட்டளை இட்டுச் செல்கிறது. காரணம் இவை கூறும் அநுபவங்கள் அனைத்தும் தனிப்பட்ட ஒருவர்க்கே உரியன என்பதின்றி, மனித இனம் முழுவதற்கும் பொதுவானவையாக இருப்பதேயாகும். இத்தகைய கவிதைகளைப் படிக்கும்பொழுது நாம் நம்மைக் கவிஞன் மன்நிலைக்குத் துர்க்கிச் செல்லவேண்டு மென்பதில்ல்ை. அதற்கு ம்றுதலையாகக் கவிஞனே தன்னை நம்முடைய மனநிலையில் வைத்துக் கவிதை புனைந்துள்ளான். ஆகலின் அவ்வநுபவத்தை யாரும் பகிர்ந்து கொள்ள முடிகிறது. ஆகுப்பாடலின் அடிப்படை யாதொரு நிகழ்ச்சியையும் கண்டு இவ்வகைக் கவிதை தோன்றுவதில்லையாதலின் இங்கே . மெய், பொய் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/287&oldid=751109" இலிருந்து மீள்விக்கப்பட்டது