பக்கம்:இலக்கியக் கலை.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகமும் புறமும் 269 வாதத்திற்கே இடமில்லை. அடிப்படைச்செய்தி ஒன்றுமே இல்ல்ையாகவின் கவிஞனைக் கட்டுப்படுத்தும் செயல் ஒன்றும் இல்லை. அவன் உணர்ச்சி, கற்பனை இரண்டையுமே துணையாகக் கொண்டு மனஉலகில் விருப்பம்போல் உலாவுகிறான். நாடகத்தில் நடிக்கும் மனிதன் பல்வேறு பாத்திரங்களை மேற்கொள்வதுபோல் அவனும் முரண்பட்ட உணர்ச்சிகள் பலவற்றைப் பர்ட்முடிகிறது. மனம் போன போக்கின்படி பாடுகிறான். ஆதலின், பல சமயங்களில் அவன் கூறுவது மேலாகப் பார்ப்பவர்க்குப் பொருத்தம் அற்றது போலவும், மரபுக்கு மாறுபட்ட்துபோலவும் காண்ப்படலாம். இந்த உரிமை அகப்பாடற் கவிஞனுக்கு உண்டு. தலைவனை அன்பற்றவன், கருணை இல்லாதவன் என்று கூறுவது தமிழ்க் கவிதை மரபுக்கு முரணானதாகும். இவ்வாறு வெளிப்படையாகக் கூறுவது மரபன்றாயினும் தலைவியின் மனத்தில் ஒரோவழி இத்தகைய நினைவு உண்டாவது இயற்கைதானே? எனவே கவிஞன் எங்கோ ஒரு தலைவியின் மனத்தில் தோன்றும் இவ்வெண்ணத்திற்கு வடிவு கொடுக்கிறான். தலைவி ஒருத்தி தலைவன்மேல் கோபித்துக் கொண்டுள்ளாள். அவன் பரத்தையினிடம் சென்றிருந்தான்; இப்போது திரும்பி வந்துள்ளான். அவனை வீட்டினுள் விட மறுக்கிறாள் தலைவி. தோழி அவனை மன்னித்துவிடுமாறு வேண்டுகிறாள். இந்நிலையில் தலைவி ஆற்றொனாத் துயர் அடைந்து அதனை வெளியிடுகிறாள். தலைவனை அன்பு அற்றவன் என்று கூறுதல் மரபன்று; ஆயினும், அதனைக் கூசாமல் கூறுகிறாள். நம்முடையூபெண்மையும் அழகும். கெட்டு அழிவதாயினும் கவலை இல்லை. தோழி! நமக்குத் தாயும் தந்தையும் போன்ற அவன் வ்வாறு செய்து மீண்டான். அன்பே இல்லாத அவனிடம் நமக்கு ೯೬ಕಾT புல்வி (பொய்க் கோபம்) வேண்டியிருக்கிறது? அவன் உறவே நமக்கு வேண்டா என்ற இப்பொருள்பட வருகிறது பாட்டு, . - . 3. கன்னலம் தொலைய நலமிகச் சாஅய், இன்னுயிர் கழியினும் உரையல், அவர்கமக்கு: அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி புலவிய்ஃது எவனோ அன்பிலங் கடையே (குறுந்திொண்க.98) இத்த்ல்வி மீண்டும் தல்ைவ்னோடு வ்ார்மற் பேர்ன்ப் ப்ோகிறாள்: இவ்வாறு நினைப்பது முறையா? இவ்வாறு கிழும் வினர்க்கள் திவ்றானவை. "கவின்க்தன் மின்நிலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/288&oldid=751110" இலிருந்து மீள்விக்கப்பட்டது