பக்கம்:இலக்கியக் கலை.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகமும் புறமும் 277. நன்கு செய்தன என்றே கூறல் வேண்டும். இத்தகைய இயல்புடையன. வற்றை மேல்நாட்ட Tř “uriomf பாட்டுக்கள் என்று கூறுவர். இதனை அடுத்து வருபவை "கதைபொதி பழம் பாடல் களாகும். தேசிங்கு ராஜன் கதை, நல்லதங்காள் கதை என்று இன்று நாம் காணும் கதைபொதி பாடல்கள் மிகப் பிற்காலத்தில் தோன்றியவையாயினும் இவற்றைப் போன்ற பாடல்கள் மிகப் பழங்காலந்தொட்டே இருந்திருத்தல் வேண்டும். பெரும் பாலும் இவ்வகைப் பாடல்களில் ஆதிமனிதனிடம் காணப்பெற்ற இயல்புகளே பேசப்பெற்றிருக்கும். வீரமும், அதன் பயனாகிய போரும் இவற்றில் இடம் பெறுவன. இவ்வகைப் பாடல்களையே ஆசிரியர் தொல்காப்பியனார், - - "தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே" - - (செய்யுளியல் - 549) என்ற குத்திரத்தால் குறிக்கிறார் போலும். இதற்குப் பொருள் கூறவந்த பேராசிரியர் தெர்ன்மை என்பது உரைவிராய்ப் பழமையவாகிய கதை பொருளாகச் செய்யப்படுவது" என்று கூறி அதற்கு உதாரண ம ர் க, பெருந்தேவனார் பாரதத்தையும், தகடுர் யாத்திரையையும் காட்டினார். இவ்விரண்டு நூல்களும் இப்பொழுது அகப்படவில்லையா யினும் மேற்சொன்ன கருத்தே இதன்கண் குறிக்கப்பெற்றுள்ளது என்பது நன்கு விளங்கும். பொதுவாக இவ்வகைப் பாடல்கள், அணிகள் முதலியன ஒன்றும் அமையப் பெறாதனவாய், விறுவிறுப்புடன் கதையைச் சொல்லிக் கொண்டு செல்லும் இயல்புடையன கூறவேண்டிய பொருள்களை மறைமுக மாகவோ, உபசார வழக்கு முதலியன விரவியோ கூறாமல் நேரடியாகக் கூறும் இயல்பின. எவ்வளவு சாதாரணமானவை யாக இவை கருதப்படினும் இலக்கியத்தில் இடம் பெற வேண்டியவைகளாகும். அதிலும் நா கரிக்ம் முற்றிப் பலவகையான கோளாறுகளையும் அழகுகளையும் அணிகன்ள பும். பெற்று விளங்கும் தற்கால இலக்கியங்களில் விழுந்து புரளும் நமக்கு எளிமையர்கவும், ஆழமா கவு:ம் அழுத்தமாகவும் உள்ள இப்பாடல்களைப் படிப்பது மிகவுழ் சிறந்ததாகும். இத்தகைய பாடல்களின் அ டிப்பட்ை ஆராய்ச்சிக்குரியதாகும். சரித்திர ஆதாரமுள்ள மனிதர் களையோ நிகழ்ச்சிகளையேர் பற்றித்தான் இவை தோன்ற வண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. பலகாலமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/296&oldid=751119" இலிருந்து மீள்விக்கப்பட்டது