பக்கம்:இலக்கியக் கலை.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகமும் புறமும் 279 கூறப்பெறும் இலக்கணம் அனைத்தும் பி. ற் காலத் தி ல் தோன்றியவை. நாட்டுப்படலம் முதலிய உறுப்பு யாதும் இன்றி நேரே துல் தெர்டங்கப்பெறுவதைச் சிலப்பதிகாரம், ‘மணிமேகலை’ இரண்டிலும் காணலாம். ஆனாலும் நாட்டுப் படலம் முதலிய உறுப்புக்கள் பெருங்காப்பியத்திற்கு இன்றியமை யாதவை என்ற கொள்கை தோன்றிய பின்னர்த் தோன்றிய எல்லாக் கர்ப்பியங்களிலும் இக் கட்டுப்பாடு போற்றிப் பாதுகாக்கப் பட்டிருக்கின்றது. இவை அனைத்தும் இலக்கியச் சிறப்புக்கள் பலவும் அமையப்பெற்ற காப்பியங்களாகும். அன்றியும் தெய்வத் தொடர்பு உடையவர்களாகக் காப்பியத் தலைவர்களைச் செய்யும் பழக்கமும் உலகில் உள்ள எல்லா மொழிக் காப்பியங்களிலும் அமைந்துவிட்ட ஒரு மரபாகிவிட்டது. தமிழ்க்காப்பியங்களில் மட்டும் இத்தகைய நிலை தோன்றிவிட்டது என்றும், ஏனைய துறைகளில் சிறந்திருக்கிற ஒரு காப்பியம் இங்கனம் கடவுட் பொருளை இடையில் கொண்டு விளங்குவதால் கெட்டே போய் விட்டது என்றும் கதறும் பகுத்தறிவுவாதிகள், உலக மொழிகளில் உள்ள காப்பியங்களைச் சற்று நோக்குவார்களாயின், தம் கூற்று எவ்வளவு அறிய ை உடையது என்பதை உணர்ந்து கொள்ளலாம். சிலப்பதிகாரம்', 'திருத்தொண்டர் புராணம்: என்ற இரு காப்பியங்களைத் தவிரத் தமிழில் காணப்பெறும் எல்லாக் காப்பியங்களும் இனிக் கூறப்பெறும் முறையில் அமைந்தவை. அவற்றில் கூறப்பெற்ற செயல்கள் மிகப் பழங் காலத்தில் தடைபெற்றவை. சரித்திர சம்பந்தமான ஆதார மற்றவை. மேலும் அவற்றின் பொருளமைதியால் ஒரு சமுதாயம் அல்லது ஒரு நாடு முழுவதையும் தழுவிக்கொள்பவை, சில சமயங்களில் ஒரு நூற்றாண்டு முழுவதிலும் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைக்கூட ஒரு காப்பியம் வெளியிடுதல் உண்டு. அக். காலத்தில் வாழ்ந்த மக்கள், அவர்கள் பண்பாடு, நாகரிகம் இவற்றைப் பல காலம் கழித்துத் தோன்றுக் காப்பியம் தம் மனக்கண் முன்னர்க் கொண்டுவந்து நிறுத்துகிறது. இரு காப்பியங்கள் இடையே உள்ள வேறுபாடு இலக்கியக் காப்பியம் என்று கூறப்பெறும் பகுதியில் தலைசிறந்து நிற்பவை கம்பராமாயணமும் சீவகசிந்தாமணியும் ஆகும். இவை இரண்டும் தோன்றக் காரணமாக இருந்தவை வடமொழியில் உள்ள பொருட்காப்பியங்களாகும், அவற்றிலிருந்து தோன்றிய இவுை அவற்றொடு அடிப்படையில் மிகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/298&oldid=751121" இலிருந்து மீள்விக்கப்பட்டது