பக்கம்:இலக்கியக் கலை.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 இலக்கியக் க்லை தொடர்புடையவை. இவற்றில் கூறப்பெறும் பொருள் அப் பழைய பொருட் காப்பியங்களிற் காணப்பெறும் பொருள்கள்ே ஆகும். வீரர் வழிபாடு, கர்ண பரம்பரைக் கதைகளை மிகுதியும் மேற்கொள்ளல் என்ற இவற்றில் இவ்ை அப் பழங் காப்பியத்தைப் பின்பற்றுகின்றன. இவ்வளவு ஒற்றுமை முதல் நூலுக்கும் வழிநூலுக்கும் இருப்பினும் நுணுகி நோக்குவார்க்கு இவற்றின் இடையே அமைந்துள்ள பெரிய வேறுபாடு தெரியாமற் போகாது. பொருட்காப்பியங்கள் தோன்றிய காலத்தில் அதில் கூறப்பெறும் கதைகள் புதுமையாக இருப்பினும் உலக்கியக் காப்பியம் தோன்றும் காலத்தில், பழமையை அடைந்துவிடுகின்றன. இராமபிரான் வாழ்ந்த காலத்திலேயே வான்மீகி வாழ்ந்து காப்பியமும் இயற்றி விட்டார் என்பதும், அதற்குப் பன்னூறு ஆண்டுகட்குப் பின்னர்க் கம்பனது இராமாயணம் தோன்றிற்று என்பதும் அறியப்படல் வேண்டும். எனவே அப் பொருட் காப்பியத்தில் உள்ள எல்லா வற்றையும் பிற்காலக் காப்பியம் ஏற்றுக்கொள்வதில்லை. இலக்கிய மரபுக்கு ஏற்ப அவை கதையைத் திரித்து அமைத்துக் கொள்கின்றன. வில்லை ஒடித்துச் சீதையை மணந்துகொள்ளு முன்னரே இராமனையும் சீதையையும் சந்திக்க வைத்து, இேருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்ர் என்று வான்மீகி கூறாத ஒன்றைக் கம்பன் கூறும் முறையைக் காண்க. இங்ஙனம் அவன் கூறக் காரணம் என்ன? தமிழ் இலக்கிய மரபு கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவேயாம். இம்முறையில் பல மாறுதல்களைக் கம்பனும் திருத்தக்கதேவரும் செய்துள்ளார்கள் எனவே பொருட்காப்பியம் புதியதாகவும், பொள்ளெனத் தோன்று வதாகவும் இருக்க, இலக்கியக் காப்பியம் இதற்கு மறுதலையாக, கற்றறிவுடையாரால், நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு இயற்றப்பெற்ற தாகவும், கலைப்பண்பு உடையதாகவும் அமைந்திருத்தல் கண்கூடு. ஒப்பு நோக்குவதற்குத் தக்கதாக ஒன்றும் பொருட் காப்பியம் தமிழ்மொழியளவில் இல்லாமல் அழிந்து போயினும் வால்மீகி இராமாயணமும் கம்பராமாயணமும் மேலே கூறியவற்றை நன்கு வலியுறுத்தலைக் கற்றார் அறிவர். இவற்றையல்லாமல் புறநானூறு முதலிய தொகுப்பில் காணப்பெறும் சில பாடல்கள் காப்பியப்பாடல்களைப் போன்றே உள்ளன்; இவற்றைக் 'கர்ப்பியத் துணுக்குகள் என்றுகூடக் கூறலாம். புறநானூற்றில் உள்ள மண்டினிந்த நிலனும் என்று தொடங்கும் இரண்டாம் பாடல் காப்பியத் துணுக்கு என்று கூற தல்ல. உதாரணம். பாண்ட வர்கள், அவர்கள் பண்பு. துரிய்ோதன்ாதியர் நூற்றுவர், இவர்களிடையே ஏற்பட்ட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/299&oldid=751122" இலிருந்து மீள்விக்கப்பட்டது